பொன்னேரி அருகே குடிநீர் வழங்க கோரி பெண்கள் காலி குடங்களுடன் போராட்டம்

பொன்னேரி அருகே குடிநீர் வழங்க கோரி பெண்கள் காலி குடங்களுடன் போராட்டம்
X

பொன்னேரி அருகே அரசு பேருந்தை சிறைப்பிடித்து பெண்கள் போராட்டம் நடத்தினர்.

பொன்னேரி அருகே குடிநீர் வழங்காததை கண்டித்து பெண்கள் அரசு பேருந்தை சிறப்பிடித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பொன்னேரி அருகே கடந்த ஒரு மாதமாக முறையாக குடிநீர் வழங்கவில்லை என கூறி பெண்கள் காலி குடங்களுடன் அரசுப் பேருந்தை சிறை பிடித்து போராட்டம் நடத்தினர். அதிகாரிகளுடன் பெண்கள் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த கடப்பாக்கம் ஊராட்சியில் சுமார் மூன்றாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் மிக்ஜாம் புயல் தாக்கத்திற்கு பிறகு இப்பகுதி மக்களுக்கு முறையாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. ஏற்கனவே கடற்கரைக்கு அருகில் உள்ளதால் ஊராட்சியில் உவர்ப்பு நீராக மாறிய நிலையில் ஆழ்துளை மோட்டார்களும் அவ்வப்போது பழுதடைந்து கடந்த 1மாதமாக முறையாக குடிநீர் வழங்கவில்லை என கூறப்படுகிறது.


இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் பல முறை முறையிட்டும் அதிகாரிகளையும் சந்தித்து மனு அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காததால் ஆத்திரமடைந்த அப்பகுதி பெண்கள் காலி குடங்களுடன் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். கடப்பாக்கம் முதல் பொன்னேரி செல்லும் அரசு பேருந்து கிராமத்திற்கு வந்த போது அந்த பேருந்தையும் சிறை பிடித்து போராட்டம் செய்தனர் கடந்த 1மாதமாக சரிவர குடிநீர் வினியோகம் செய்யாததால் விலை கொடுத்து தண்ணீரை வாங்க வேண்டிய அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டினர்.

உவர்ப்பு நீர் காரணமாக சரும நோய் உள்ளிட்ட பல்வேறு நோய் பாதிப்புகள் ஏற்பட்டு வருவதாக பெண்கள் குற்றம் சாட்டினர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பெண்களிடம் சமரசம் பேச வந்த காவல்துறையினர் மற்றும் வட்டார வளர்ச்சி அதிகாரிகளிடம் பெண்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சீரான குடிநீர் வினியோகம் செய்ய விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தொடர்ந்து பெண்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதையடுத்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

மேலும் இது குறித்து அப்பகுதி மக்கள் தெரிவித்த போது பல்வேறு போராட்டங்கள் நடத்தியும் தற்போது வரை எவ்வித நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் அதிகாரிகள் உறுதியளித்ததன் பேரில் கலைந்து செல்கின்றோம். விரைவில் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் பெரிய அளவில் மக்களளை ஒன்று திரட்டி போராட்டம் நடத்துவோம் என்று எச்சரித்து விட்டு சென்றனர். இந்தப் போராட்டத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags

Next Story
ai based agriculture in india