ஆபத்தான மின்கம்பங்கள் அகற்றப்படுமா?

மீஞ்சூர் அருகே உயர் மின்னழுத்த கம்பங்கள் சேதம். அகற்றி புதிய கம்பங்கள் நட நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை.

திருவள்ளூர் மாவட்டம். பொன்னேரி தொகுதிக்கு உட்பட்ட, மீஞ்சூர் அடுத்த ஜெயின் கல்லூரி எதிரே உயர் மின்னழுத்த மின் கம்பங்கள் சேதமடைந்து, கம்பிகள் வெளியே தெரிந்த படி உள்ளது. உயிர் சேதங்கள் ஏற்படுவதற்கு முன்பே அதனை மாற்றி அமைக்க கோரி பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

மேலூரிலிருந்து,திருவெள்ளைவாயல் துணை மின் நிலையத்திற்கு 11 கேவி உயர் மின்னழுத்த மின்சாரத்தினை பெரிய கேபிள் வழியாக கேசவபுரம் பகுதியில் இருந்துமீஞ்சூர் ஜெயின் கல்லூரி வழியாக ரயில் தண்டவாளத்தினுள் நுழைத்து கம்பங்கள் அமைத்து எடுத்துச் செல்கின்றனர்.

அந்த மின்கம்பங்கள் தற்போது மிகவும் சேதம் அடைந்த நிலையில் இரும்பு கம்பிகள் வெளியே தெரிந்தபடி காட்சியளிக்கின்றன, மேலும் அவ்வழியாக செல்லும் கிராமத்தினர் மற்றும் கல்லூரி மாணவர்கள் மழை நேரங்களிலும்,பலத்த காற்று வீசும் நேரங்களிலும், மிகுந்த பயத்துடன் சென்று வருகின்றனர்.

இதனை மின்துறை அதிகாரிகள் கண்டு நடவடிக்கை எடுத்து சரி செய்து தரும்படி கிராம மக்கள் கோரிக்கை வைக்கின்றனர். மேலும் துணை மின் நிலையத்திற்கு செல்லும் மின்சார கம்பங்கள் இது போன்ற நிலையில் இருந்தால், எப்படி என்று கேள்வி எழுப்புகின்றனர்,இதுகுறித்து பலமுறை மின் ஊழியர்களிடம் தகவல் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என புகார் தெரிவிக்கின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!