கோவிலுக்கு சென்ற மனைவி மாயம்: கணவர் காவல் நிலையத்தில் புகார்

கோவிலுக்கு சென்ற மனைவி மாயம்: கணவர் காவல் நிலையத்தில் புகார்
X
எஸ்.பி.கே நகரில் கோவிலுக்கு செல்வதாக கூறிச்சென்ற மனைவி காணவில்லை; கணவர் காவல் நிலையத்தில் புகார்.

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அடுத்த எஸ்.பி.கே நகர் பகுதியை சேர்ந்தவர் குமார் என்பவரின் மனைவி சுசிலா (29). இவர் முன்தினம் கோவிலுக்கு செல்வதாக கூறிச் சென்றவர் தற்போது வரை வீட்டிற்கு வரவில்லை. அக்கம்பக்கத்தினர், உறவினர்கள் வீடு என பல்வேறு இடங்களில் தேடியும் மனைவி கிடைக்காததால் சோழவரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!