‘நாடாளுமன்ற தேர்தலில் வணிகர் சங்க பேரமைப்பு ஆதரவு யாருக்கு?’-விக்கிரமராஜா

‘நாடாளுமன்ற தேர்தலில்  வணிகர்  சங்க பேரமைப்பு ஆதரவு யாருக்கு?’-விக்கிரமராஜா
X
பொன்னேரியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா.
நாடாளுமன்ற தேர்தலில் ஆதரவு யாருக்கு என கேட்டதற்கு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா கூறினார்.

வணிகர்களின் கோரிக்கைகளை ஏற்கும் அரசியல் கட்சி குறித்து ஆய்வு செய்து நாடாளுமன்ற தேர்தலில் வணிகர்கள் சங்க பேரமைப்பு ஆதரவு அளிக்கும் என பொன்னேரியில் வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா அளித்த பேட்டியில் கூறினார்.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற தமிழ்நாடு வணிகர்கள் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மாநகராட்சிகளில் கடைகளுக்கு உரிமம் பெற கட்டிட உரிமையாளர் வரி கட்டியிருக்க வேண்டும் என அறிவித்திருப்பது ஏற்கத்தக்கதல்ல. கடைகளுக்கு நிபந்தனைகள் ஏதுமின்றி உரிமம் தர வேண்டும் எனவும், கடையை காலி செய்ய வேண்டுமென்றால் கட்டிட உரிமையாளர் வேண்டுமென்றே வரியை கட்டாமல் கடைக்கு சீல் வைக்கும் ஆபத்து உள்ளது. ஜி.எஸ்.டி.வரி விதிப்பு முறையில் 18,12, 28 என்ற முறையை மாற்றி ஒரே முறை வரியாக மாற்றிட வேண்டும் என தொடர்ந்து கோரிக்கைகள் வைத்து வருகிறோம்.


மே மாதம் புதிய அரசு அமைந்தவுடன் மீண்டும் சென்று வலியுறுத்த உள்ளோம். ஒட்டுமொத்தமாக 30% விலை உயர்ந்துள்ளது. அரிசி கடுமையாக விலை ஏறியுள்ளது. பூண்டு தற்போது விலை சரிந்து வருகிறது. அரிசி, பருப்பு, சோப்பு உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் 30% விலை உயர்ந்துள்ளது. இதனை கட்டுப்படுத்த அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். வணிகர்களின் கோரிக்கைகளை ஏற்கும் அரசியல் கட்சி குறித்து ஆய்வு செய்து நாடாளுமன்ற தேர்தலில் வணிகர்கள் சங்க பேரமைப்பு ஆதரவு அளிக்கும்.

கடைகளுக்குள் புகுந்து மிரட்டி பணம் பறிக்கும் கும்பலிடம் இருந்து பாதுகாப்பு குறித்து மே மாதம் நடைபெற்ற உள்ள வணிகர்கள் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்ற உள்ளோம். வணிகர் பாதுகாப்பு குறித்து அரசு சட்ட திருத்தம் கொண்டு வர வேண்டும் . 24மணி நேரம் கடையை திறக்கலாம் என முதலமைச்சர் அறிவித்துள்ள நிலையில் காவல்துறை கடைகளை மூட நிர்பந்திப்பது அபத்தமானது.

இவ்வாறு விக்கிரம ராஜா கூறினார்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!