மருத்துவ படிப்புக்கு தேர்வான மாணவிக்கு வாட்ஸ் ஆப் குழுவினர் நிதியுதவி

மருத்துவ படிப்புக்கு தேர்வான மாணவிக்கு வாட்ஸ் ஆப் குழுவினர் நிதியுதவி
X

பொன்னேரி அருகே மருத்துவ படிப்புக்கு தேர்வான அரசு பள்ளி மாணவி அனுஷ்காவிற்கு உண்மை உடன்பிறப்புகள் வாட்ஸ் ஆப் குழு முலம் நிதியுதவி வழங்கப்பட்டது.

பொன்னேரி அருகே மருத்துவ படிப்புக்கு தேர்வான அரசு பள்ளி மாணவிக்கு உண்மை உடன்பிறப்புகள் வாட்ஸ் ஆப் குழு முலம் நிதியுதவி.

பொன்னேரி அருகே அரசு பள்ளியில் படித்து மருத்துவ படிப்புக்கு தேர்வான மாணவிக்கு உண்மை உடன்பிறப்புகள் வாட்ஸ் ஆப் குழு முலம் நிதி திரட்டி வாடஸ் அப் குழுவினர் நிதி உதவி வழங்கியது. மேலும் ஆசிரியர்கள் முக்கிய பிரமுகர்கள் பொதுமக்கள் என பலர் வழங்கினார்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தாலுக்கா மீஞ்சூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது பெரும்பேடு ஊராட்சி இந்த உள்ள பெரும்பேடு குப்பம் பகுதியை சேர்ந்த தம்பதிகளான சபாபதி பார்வதி இவரது மகள் அனுஷ்கா. இவர் பெரும்பேடு பகுதியிலுள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்து பின்னர் மருத்துவ நீட் தேர்வு மூலம் மருத்துவப் படிப்பிற்காக தேர்வு செய்யப்பட்டார். இதனையடுத்து இவருக்கு விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்து மருத்துவப்படிப்பில் சேர்ந்துள்ளார். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் உண்மை உடன்பிறப்புக்கள் வாட்ஸ் ஆப் குழு மூலம் தெரிவித்து நிதி வசூலித்து மருத்துவ மாணவி படித்த பள்ளிக்கு சென்று மாணவி அனுஷாவிற்கு அப்பள்ளியில் பாராட்டு விழா நடத்தி நிதியை வழங்கினர்.

இந்நிகழ்ச்சிக்கு மீஞ்சூர் திமுக முன்னாள் ஒன்றிய செயலாளரும் முன்னாள் மாவட்ட ஊராட்சி குழு துணைத்தலைவருமாகிய தடப்பெரும்பாக்கம் பாஸ்கர் சுந்தரம், பொன்னேரி பேரூராட்சி முன்னாள் கவுன்சிலர் ஜோதிஸ்வரன், பெரும்பேடு ஊராட்சி மன்ற தலைவர் ராஜேஷ், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் சந்திரசேகர், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் ராதாகிருஷ்ணன்,திமுக நிர்வாகிகள் விநாயக மூர்த்தி, வேலு, நக்கீரன், சீனு, தினேஷ்குமார், விக்னேஸ்வரன், ஆதிகேசவன், மதியழகன் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர் மைதிலி, ஆசிரியர்கள் சுமதி, பாஸ்கரன், தினகரன், ஜமுனாராணி, இளங்கோ, அமல்ராஜ், டில்லிபாபு மற்றும் மாணவ மாணவிகள் என பலர் கலந்து கொண்டனர்

விழாவில்உண்மை உடன்பிறப்புகள் வாட்ஸ் அப் குழு மூலம் வசூலித்த 75 ஆயிரம் நிதியை மருத்துவ மாணவியை அனுஷ்காவிற்கு வழங்கினார்.முன்னதாக பள்ளி வளர்ச்சி நிதிக்காக 10 ஆயிரம் வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஆசிரியர்கள், பொதுமக்கள், முக்கிய பிரமுகர்கள் என பலர் மருத்துவ மாணவிக்கு நிதிகளை வழங்கினர். ஆசிரியர் ஒருவர் மாணவிக்கு ஸ்டெதாஸ்கோப் வழங்கியது குறிப்பிடத்தக்கதாகும் .

முடிவில் மருத்துவ மாணவி அனுஷ்கா தெரிவித்ததாவது;- தான்படித்து தேர்ச்சி பெற்ற முறையினை மற்ற மாணவர்களுக்கு விளக்கி எடுத்துரைத்தார். அப்போது அவர் கூறியதாவது தமிழ் ஆங்கிலம் என்ற வேறுபாடே கிடையாது எந்த மொழியாக இருந்தாலும் சுலபமான முறையில் நாம் கற்றுக்கொள்ளலாம். எனவே நீட் தேர்வு என்பதினை மாணவ மாணவிகள் கண்டு பயப்பட வேண்டாம் என அறிவுரைகளை வழங்கினார். பின்னர் நான் மருத்துவர் ஆன பிறகு நான் படித்த கிராமப் பகுதியில் தான் மருத்துவ சேவை செய்வேன் எனவும், குறைந்த செலவில் மருத்துவம் பார்ப்பேன் என தெரிவித்தார். இந்த அரசு பள்ளியில்தான் ஆறாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை படித்துள்ளேன் மற்றும் பத்தாம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்று பள்ளியில் முதல் மாணவியாக தேர்ச்சி பெற்றேன் என தெரிவித்தார். என் படிப்பிற்கு உறுதுணையாக இருந்த ஆசிரியர்களுக்கு பெரும் நன்றினை தெரிவித்துக் கொள்கிறேன் என கூறினார்.

Tags

Next Story
குடல் ஆரோக்கியத்தை ஆரோக்கியமா வெச்சுக்கணுமா? அப்ப இத கண்டிப்பா பண்ணுங்க!| how to improve gut health in Tamil