பாடியநல்லூரில் கிருஷ்ண ஜெயந்தியையொட்டி பக்தர்களுக்கு நலத்திட்ட உதவிகள்

பாடியநல்லூரில் கிருஷ்ண ஜெயந்தியையொட்டி பக்தர்களுக்கு நலத்திட்ட உதவிகள்
X

பாடிய நல்லூரில் கிருஷ்ணஜெயந்தியையொட்டி பக்தர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

பாடியநல்லூரில் கிருஷ்ண ஜெயந்தியையொட்டி பக்தர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த சோழவரம் ஒன்றியம் பாடியநல்லூர் ஊராட்சியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ திருலோக நாயகி சமேத ஸ்ரீ திருநீற்றீஸ்வரர் ஆலயத்தில் ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு பக்தர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி ஸ்ரீ ஆண்டாள் அறக்கட்டளையின் பொது செயலாளரும் சிவன் கோயில் நிர்வாக செயலாளருமான சரவணன் தலைமையில் நடை பெற்றது.

நிகழ்ச்சியில் மூலவர்கள் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு பூஜைகள் நடை பெற்றது.பின்னர் திருவண்ணாமலை எரும்பூர் கர்ணன் சித்தர் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்து பாடியநல்லூர் சுற்றுவட்டார பக்தர்களுக்கு வேட்டி, துண்டு மற்றும் காணிக்கை போன்ற நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதில் ஆலய நிர்வாகிகள், பக்தர்கள் கலந்துகொண்டனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!