ஆரணியில் தண்ணீர் பந்தல் - எம்எல்ஏ கோவிந்தராஜன் திறந்து வைத்தார்

ஆரணியில் தண்ணீர் பந்தல் - எம்எல்ஏ கோவிந்தராஜன் திறந்து வைத்தார்
X

ஆரணியில் தண்ணீர் பந்தலை கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி.ஜே. கோவிந்தராஜன் திறந்து வைத்து பொதுமக்களுக்கு நீர் மோரை வழங்கினார்.

ஆரணியில் தண்ணீர் பந்தலை கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டிஜே கோவிந்தராஜன் திறந்து வைத்தார்.

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் ஒன்றியம், ஆரணி பேரூர் திமுக சார்பில் ஆரணி பேருந்து நிறுத்தம் தண்ணீர் பந்தல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஆரணி நகர செயலாளர் ஜி.பி. வெங்கடேசன் தலைமை தாங்கினார். ஆரணி பேரூராட்சி 10.வது வார்டு கவுன்சிலர் கண்ணதாசன், முன்னாள் நகர செயலாளர் முத்து, அவைத்தலைவர் ரமேஷ், மாவட்ட பிரதிநிதி வழக்கறிஞர் கரிகாலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் அனைவரையும் சோழவரம் திமுக ஒன்றிய செயலாளர் செல்வசேகரன் வரவேற்றார்

இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக, திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளரும் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினருமான டி.ஜே. கோவிந்தராஜன் கலந்துகொண்டு தண்ணீர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு நீர், மோர், இளநீர், தர்பூசணி வழங்கி சிறப்புரையாற்றினார். இதில் நிர்வாகிகள் மங்களம் ஊராட்சி மன்ற தலைவர் சுரேஷ், பேரூராட்சி 11. வார்டு கவுன்சிலர் ரஹ்மான் கான், வழக்கறிஞர்கள் சுரேந்தர், ஜெகன், மற்றும் புதுக்குப்பம் பாலாஜி, நிலவழகன். ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!