திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் குடிநீர் பந்தல் திறப்பு

திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் குடிநீர் பந்தல் திறப்பு
X

திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பொன்னேரி பழைய பேருந்து நிலையத்தில் குடிநீர் பந்தல் திறக்கப்பட்டது. 

திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் குடிநீர் பந்தல் திறக்கப்பட்டது.

திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பொன்னேரி பழைய பேருந்து நிலையத்தில் குடிநீர் பந்தலை திருவள்ளூர் வடக்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் பொன்னேரி தொகுதி எம்எல்ஏ வு மான சிருனியம்பலராமன் திறந்து வைத்தார்.

இதில் பொது மக்களுக்கு நீர்மோர், தர்பூசணி, இளநீர், வெள்ளரிபிஞ்சு, குளிர்பானம், உள்ளிட்ட தாகத்தை தணிக்கும் பொருட்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் முன்னாள் எம்எல்ஏ பொன் ராஜா, எம்ஜிஆர் மாவட்ட இளைஞரணி செயலாளரும் ஒன்றியக் கவுன்சிலருமான கிருஷ்ணாபுரம் பானுபிரசாத், பொன்னேரி நகர மன்ற துணைத் தலைவர் வக் கீல் விஜயகுமார் உள்ளிட்ட ஏராள மான அதிமுக நிர்வாகிகள் பங்கேற்றனர்.

ஜனபன்சத்திரம், தச்சூர், ஆண்டார்-குப்பம் பகுதிகளில் நடந்த விழாவில் ஒன்றிய செயலாளர் பிரகாஷ், பஞ்செட்டி ஊராட்சிமன்ற தலைவர் பஞ்செட்டி சீனிவாசன், முன்னாள் தலைவர் ஜெகன்நாதபுரம் சம்பத் மற்றும் மாவட்ட, ஒன்றிய, அதிமுக நிர்வாகிகள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!