புதிதாக கட்டப்பட்டு வரும் எண்ணெய் ஆலையில் கிராம மக்கள் முற்றுகை

புதிதாக கட்டப்பட்டு வரும் எண்ணெய்  ஆலையில் கிராம மக்கள் முற்றுகை
X

முற்றுகை போராட்டம் நடத்திய கிராம மக்கள்.

மீஞ்சூர் அருகே இந்தியன் ஆயில் எண்ணெய் நிறுவன கட்டுமானப் பணிகள் நடைபெறும் பகுதியில் கிராம மக்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர்.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தொகுதிக்கு உட்பட்ட மீஞ்சூர் அடுத்த வல்லூர் பகுதியில் இந்தியன் ஆயில் எண்ணெய் நிறுவனம் சார்பில் புதியதாக ஆலை அமைப்பதற்கான கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. எரிபொருள் சேமிப்பு கிடங்கு, பரிசோதனை மையம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இந்த பகுதியில் அமைய உள்ள நிலையில் கடந்த சில நாட்களாக கட்டுமான பணிகள் இங்கு நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் புதியதாக நிறுவப்பட உள்ள இந்த ஆலையில் உள்ளூர் மக்களுக்கு வேலை வழங்க கோரி வல்லூர் ஊராட்சியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் கட்டுமான பணிகள் நடைபெறும் இடத்தை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தங்களது ஊராட்சியில் நிறுவப்படும்

நிறுவனத்தில் உள்ளூர் இளைஞர்களுக்கு வேலை வழங்க வேண்டும் எனவும், அவரவர் கல்வி தகுதிக்கு ஏற்றார் போல வேலை வாய்ப்பினை எண்ணெய் நிறுவன அதிகாரிகள் வழங்கிட வேண்டும் என கேட்டுக்கொண்டனர். உள்ளூர் மக்களுக்கு கட்டாயம் வேலை வழங்க வேண்டும் என எண்ணெய் நிறுவன அதிகாரிகளிடம் அப்போது வலியுறுத்தினர்.

வட்டாட்சியர் தலைமையில் அமைதிப் பேச்சு வார்த்தை நடத்தி பிரச்சனைக்கு தீர்வு காணுமாறு காவல்துறையினர் அறிவுறுத்தியதை தொடர்ந்து கிராம மக்கள் முற்றுகைப் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்தப் போராட்டத்தில் அப்பகுதியில் பெரும் பதற்றமும் பரபரப்பு ஏற்பட்டது.

Tags

Next Story