பொன்னேரி அருகே கார் மீது வேன் மோதி விபத்து: போக்குவரத்து பாதிப்பு

பொன்னேரி அருகே கார் மீது வேன் மோதி விபத்து: போக்குவரத்து பாதிப்பு
X

வாகன ஓட்டுநர்களுக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் பாதிப்புக்குள்ளான போக்குவரத்து.

பொன்னேரி அருகே கார் மீது வேன் மோதி விபத்துக்குள்ளானதால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்புக்குள்ளானது.

திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காட்டில் இருந்து கன்னிகைப்பேர் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலைகளுக்கு ஆட்களை ஏற்றி கொண்டு வேன் சென்று கொண்டிருந்தது. பொன்னேரி அருகே கள்ளுகடைமேடு பகுதியில் முன்னால் சென்று கொண்டிருந்த கார் திடீரென நின்றதால் கார் மீது வேன் மோதியது. இதில் காரின் பின்பகுதியும், வேனின் முன்பகுதியும் பலத்த சேதமடைந்தது.

வேனில் பயணித்த தனியார் நிறுவன பெண் தொழிலாளர்களுக்கு சிறு காயம் ஏற்பட்டது. இதனால் கார் டிரைவருக்கும், வேன் டிரைவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த விபத்து காரணமாக பொன்னேரி - பழவேற்காடு சாலையில் சுமார் 1மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பொன்னேரி போலீசார் இரண்டு வாகனங்களையும் அப்புறத்தியதை தொடர்ந்து போக்குவரத்து சீரானது. கார் மீது வேன் மோதிய விபத்தால் ஓட்டுநர்களுக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக பரபரப்பு நிலவியது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!