ஸ்ரீ செங்காளம்மன் ஆலயத்தில் வைகாசி பவுர்ணமி சிறப்பு பூஜை

ஸ்ரீ செங்காளம்மன் ஆலயத்தில் வைகாசி பவுர்ணமி சிறப்பு பூஜை
X

ஸ்ரீ செங்காளம்மன் ஆலயத்தில் உலக மக்கள் நன்மை வேண்டி நடைபெற்ற வைகாசி பௌர்ணமி சிறப்பு பூஜை. 

Today Temple News in Tamil -அலமாதி கிராமம் ஸ்ரீ செங்காளம்மன் ஆலயத்தில் உலக மக்கள் நன்மை வேண்டி வைகாசி பௌர்ணமி சிறப்பு பூஜை நடைபெற்றது.

Today Temple News in Tamil - திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் ஒன்றியம் அலமாதி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ செங்காளம்மன் ஆலயத்தில் உலக மக்கள் நன்மை வேண்டி வைகாசி பௌர்ணமி சிறப்பு பூஜை ஆலய நிர்வாகி சக்தி சரவணன் தலைமையில் நடைபெற்றது. பின்னர் அம்மனுக்கு பால், தயிர், மஞ்சள், குங்குமம், சந்தனம், விபூதியால் சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு வண்ணமலர்களால் அம்மனுக்கு அலங்காரம் செய்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து ஆலய தொண்டரணி மகளிர்களுக்கு ஆலயத்தின் சார்பில் சக்தி சசிகலா சரவணன் புடவை மற்றும் மங்கள பொருட்கள் வழங்கப்பட்டது. இதில் சுற்றுவட்டார பக்தர்கள் கலந்து கொண்டு அர்ச்சனைகள் செய்து சுவாமி தரிசனம் செய்தனர். முடிவில் ஆலயம் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது.

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story