ஊத்துக்கோட்டை: விபத்தில் விவசாயி படுகாயம்

ஊத்துக்கோட்டை: விபத்தில் விவசாயி படுகாயம்
X
ஊத்துக்கோட்டை பாலம் அருகே மோட்டார் சைக்கிள் மோதியதில் விவசாயி படுகாயம் அடைந்தார்.

ஊத்துக்கோட்டை பாலம் அருகே மோட்டார் சைக்கிள் மோதியதில் விவசாயி படுகாயம் அடைந்தார்.

திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் ஊத்துக்கோட்டை நாகலாபுரம் சாலையில் வசித்து வரும் விவசாயி தேவராஜ் (64). இவர் தனது மோட்டார் சைக்கிளில் நிலத்திற்குச் சென்று கொண்டிருந்தார். ஊத்துக்கோட்டை மேம்பாலம் அருகே சென்றபோது பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று கண்ணிமைக்கும் நேரத்தில் தேவராஜ் மீது மோதியது.

இந்த விபத்தில் படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய அவரை, அருகில் இருந்தவர்கள் மீட்டு சென்னை அரசு மருத்துவமனைக்கு சென்று அனுமதித்தனர். இந்த விபத்து குறித்து பென்னாலூர்பேட்டை காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்துக்கு காரணமான மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர். மேலும் தப்பி ஓடிய குற்றவாளியை வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!