இரு சக்கர வாகனம் மீது லாரி மோதல்: கல்லூரி மாணவன் பலத்த காயம்

இரு சக்கர வாகனம் மீது லாரி மோதல்: கல்லூரி மாணவன் பலத்த காயம்
X

தாயில் பலத்த காயம் ஏற்பட்டு கல்லூரி மாணவன் ஜெகநாதன்.

மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் கண்டெய்னர் லாரி மீது இரு சக்கரம் வாகனம் மோதிய விபத்தில் கல்லூரி மாணவனுக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டது.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தொகுதி, நெய்தவாயல் பகுதியை சேர்ந்தவர் ஜெயகாந்தன் (வயது 18). அங்குள்ள கல்லூரி ஒன்றில் இரண்டாம் ஆண்டு பயின்று வருகிறார்.

இந்த நிலையில், தமது 2 நண்பர்களுடன் இரு சக்கர வாகனத்தில் 3 பேரும் மீஞ்சூர் நோக்கி சென்று கொண்டிருந்த போது, மீஞ்சூரில் இருந்து வண்டலூர் சென்ற கண்டெய்னர் லாரி ஒன்று வெளிவட்ட சாலையில் திரும்பிய போது, அதனை முந்தி சென்ற இரு சக்கர வாகனத்தின் மீது லாரி மோதியதில், லாரியின் முன்பக்க டயரில் இரு சக்கர வாகனம் சிக்கியது. இதில் இரு சக்கர வாகனத்தை ஓட்டி வந்த ஜெயகாந்தனுக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டது.

பின்னால் அமர்ந்திருந்த 2 பேரும் தப்பி ஓடிய நிலையில், வாகன தணிக்கையில் இருந்த போக்குவரத்து காவலர்கள் மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் மீஞ்சூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இந்த விபத்து குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!