பேருந்தின் மீது இருசக்கர வாகனம் மோதல்.ஒருவர் உயிரிழப்பு. மற்றவர் மருத்துவமனையில் அனுமதி!

பேருந்தின் மீது இருசக்கர வாகனம் மோதல்.ஒருவர் உயிரிழப்பு. மற்றவர் மருத்துவமனையில் அனுமதி!
X
பொன்னேரி அடுத்த பழவேற்காடு பகுதியில் நின்று கொண்டிருந்த பேருந்தின் மீது இரு சக்கர வாகனம் மோதிய விபத்தில் இளைஞர் உயிரிழப்பு மற்றவர் படுகாயம் மருத்துவமனையில் அனுமதி.

பழவேற்காடு அருகே நின்று கொண்டிருந்த அரசுப் பேருந்து மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழப்பு. ஒருவர் மருத்துவமனையில் அனுமதி. நண்பனின் பிறந்தநாளை கொண்டாடி திரும்பிய போது சோகம்.

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி தனியார் தொழிற்சாலையில் பணியாற்றி வரும் நண்பர்கள் ஒருவரது பிறந்தநாளை பழவேற்காட்டில் கொண்டாடினார். பிறந்தநாள் கொண்டாட்டத்தை முடித்து இருசக்கர வாகனங்களில் வீடு திரும்பினர். பழவேற்காடு அருகே போலாச்சியம்மன்குளம் பகுதியில் நின்று கொண்டிருந்த பேருந்து மீது இருசக்கர வாகனம் பயங்கரமாக மோதியது.

இதில் ஹெல்மெட் அணியாமல் வாகனத்தை ஓட்டி வந்த பெரியபாளையம் அடுத்த ஆத்துப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த விக்கி (வயது-21),சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.உடன் பயணித்த கும்புளி சேர்ந்த தீபக் ( வயது-23). படுகாயமடைந்த நிலையில் அவரை மீட்ட பொதுமக்கள் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்து குறித்து தகவலறிந்த போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து செங்குன்றம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Tags

Next Story
பெருந்துறையில் புகையிலை விற்பனைக்கு எதிராக கடைகளுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்