பழவேற்காட்டில் படகு சவாரி செய்த இருவர் ஏரியில் மூழ்கி சாவு

பழவேற்காட்டில் படகு சவாரி செய்த இருவர் ஏரியில் மூழ்கி சாவு
X

பைல் படம்.

பொன்னேரி அருகே பழவேற்காட்டில் படகு சவாரி செய்த இருவர் ஏரியில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காட்டிக்கு சுற்றுலா வந்த சென்னை,அம்பத்தூர் அடுத்த பாடி பகுதியைச் சேர்ந்த பெயிண்டர் செல்வராஜ் வயது 45 என்பவரும், அதே பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவன் கதிரவன் வயது 20 ஆகியோர் பழவேற்காட்டிற்கு சென்று படகு மூலமாக ஏரியில் படகு சவாரி செய்துள்ளனர்.

பழவேற்காடு அருகே உள்ள முகத்துவாரம் பகுதியில் படகு செல்லும் போது தவறி ஏரியில் விழுந்து உள்ளனர். இதில் சம்பவ இடத்தில் இருவரும் இறந்துள்ளனர். உடனடியாக திருப்பாலைவனம் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு ஏரியில் இருந்து இருவரும் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்து விட்டு இருவரும் உயிரிழ்ந்து விட்டதாக தகவல் கூறியுள்ளனர். இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!