பொன்னேரி அருகே நிலக்கரி கிடங்கு முன்பாக லாரி உரிமையாளர்கள் போராட்டம்

பொன்னேரி அருகே நிலக்கரி கிடங்கு முன்பாக  லாரி உரிமையாளர்கள் போராட்டம்
X
பொன்னேரி அருகே லாரி உரிமையாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பொன்னேரி அருகே நிலக்கரி கிடங்கு முன்பாக லாரி உரிமையாளர்கள் போராட்டம் நடத்தினர்.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த காட்டுப்பள்ளி ஊராட்சியில் அடங்கிய எண்ணூர் நிலக்கரி சேமிப்பு கிடங்கு முன்பு சென்னை,எண்ணூர்,காட்டுப்பள்ளி ஒருங்கிணைந்த பகுதி டிப்பர் லாரி மற்றும் டிரெய்லர் உரிமையாளர்கள் சங்கம் சார்பில் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

டிப்பர் வாகனங்களில் இருந்து கொண்டு செல்லும் நிலக்கரிக்கான வாடகைக் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று முடிவு செய்து,2020 ஆம் ஆண்டு முதல் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டு,அந்த விகிதத்தில் மட்டுமே டிப்பர் வாகனங்களை இயக்கி வருவதாகவும்,அப்போது டீசல் விலை. 80 ரூபாயாக இருந்தது ஆனால் இப்போது 102 ரூபாய் . பின்னர் டயர் விலை அப்போது 37000 / - இப்போது டயர் விலை சுமார் 49500.சுங்கச்சாவடியில்

2020 இல் கட்டணம் இல்லை,இப்போது 2022 இல் மீஞ்சூர் முதல் வண்டலூர் வரை புதிய கட்டணமும் அதே போல் அனைத்து விலைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளது.விலைவாசி உயர்வால் இந்த போக்குவரத்து தொழிலை தங்களால் தக்கவைக்க முடியவில்லை இதனால் தங்கள் குடும்பம் மற்றும் தங்களை நம்பி இருக்கும் குடும்பங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு அன்றாட அத்தியாவசிய செலவுகளை கூட சமாளிக்க முடியாமல் தவித்து வருகின்றனர்.லாரி உரிமையாளர்கள் போக்குவரத்தை நடத்த மிகவும் சிரமப்படுகின்றனர், மேலும் வீட்டு வாடகை,பள்ளி கட்டணம் கட்ட முடியவில்லை எனவும் இதனை சமாளிக்க இறுதியாக 30 சதவீதத்தை அதிகரிக்க வேண்டி கோரிக்கைகளை முன் வைத்து காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!