பொன்னேரி அருகே வாகன ஓட்டிகளின் அலட்சிய போக்கால் போக்குவரத்து நெரிசல்
பொன்னேரி சாலையில் வாகனங்கள் போக்குவரத்து நெருக்கடியில் சிக்கி நிறுத்தப்பட்டிருந்த காட்சி.
பொன்னேரியில் வாகன ஓட்டிகளின் அலட்சியத்தால் போக்குவரத்து ஸ்தம்பித்தது. சாலையின் இருபுறமும் காரை நிறுத்திவிட்டு சென்றதால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் பழவேற்காடு - செங்குன்றம், கும்மிடிப்பூண்டி, சோழவரம், பெரியபாளையம், இடையிலான வழித்தடத்தின் முக்கிய பகுதியான ஹரிஹரன் பஜார் வீதியில் சாலையின் இருபுறமும் வாகன ஓட்டிகள் கார்களை நிறுத்திவிட்டு சென்றனர். இதன் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து ஸ்தம்பித்ததால் சாலையின் இருபுறமும் எதிரும் புதிருமாக வாகனங்கள் செல்ல முடியாமல் அணிவகுத்து நின்றன.
இதனால் பள்ளி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த மாணவ மாணவிகளும், பல்வேறு பகுதிகளுக்கு செல்ல வேண்டிய பொதுமக்களும் பெரும் அவதிக்கு உள்ளாகினர். இது குறித்து தகவல் அறிந்து நிகழ்விடத்திற்கு வந்த காவல்துறையினர் நீண்ட போராட்டத்திற்கு பின்னர் போக்குவரத்தை சீர்படுத்தினர். வாகன ஓட்டிகளின் அலட்சியத்தால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இது குறித்து பொதுமக்கள் தெரிவிக்கையில் பொன்னேரி முக்கிய சாலைகளில் பகுதிகளில் கார்கள், இருசக்கர வாகனங்கள் அதிக அளவில் நிறுத்தி வைப்பதால் இவ்வழியாக பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் கனரக வாகனங்கள் மற்ற வாகனங்கள் மிகவும் அவதிக்கு உள்ளாவதால் வாகன நெரிசலில் சிக்கி மணி கணக்கில் காத்திருந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே இது போன்று மணிக்கணக்கில் வாகனங்களை நிறுத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இது மட்டுமல்லாமல் பொன்னேரி, மீஞ்சூர் பகுதியில் சாலையோரத்தில் நடைபாதை வியாபாரிகள் கடை நடத்துவதால் இதுபோன்று நிலைமை ஏற்படுவதாகவும் பொதுமக்கள் தெரிவித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu