மணலி புதுநகர் பகுதியில் பள்ளியில் மாணவர்களுக்கு போக்குவரத்து விழிப்புணர்வு

மணலி புதுநகர் பகுதியில் பள்ளியில் மாணவர்களுக்கு போக்குவரத்து விழிப்புணர்வு
X

மணலி புதுநகர் ஜெயகோபால் கரோடியா உயர் நிலைப்பள்ளியில் போக்குவரத்து குறித்து காவல் துறை சார்பில் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

மணலி புதுநகர் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் மாணவ மாணவிகளு க்கு போக்குவரத்து குறித்து காவல்துறை சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த மணலி புதுநகர் பகுதியில் ஜெயகோபால் கரோடியா உயர் நிலைப்பள்ளி உள்ளது. இப் பள்ளியில் போக்குவரத்து குறித்து காவல் துறை சார்பில் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

இதில் போக்குவரத்து காவல்துறை மாதவரம் உதவி ஆணையாளர் மலைச்சாமி மற்றும் உதவி ஆய்வாளர் சரவணன் ஆகியோர் பள்ளி மாணவர்களுக்கு தலைக்கவசம் அணியவேண்டும். போக்குவரத்து விதிமுறைகளை மதித்து கடைபிடிக்க வேண்டும். மோட்டார் சைக்கிள்களில் மூன்று பேர் செல்லக்கூடாது. பஸ் படிக்கட்டில் தொங்கிக்கொண்டு பயணம் செய்யக்கூடாது உள்ளிட்ட செயல்களை செய்யக்கூடாது என அறிவுரைகள் கூறினார்.

இதில் பள்ளி தலைமை ஆசிரியர் ரவி மற்றும் பாலம் நிர்வாகிகள் எஸ் பெஞ் சமின், சிவஜோதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story