ஆரணி பேரூராட்சி அலுவலகத்தை வியாபாரிகள் முற்றுகையிட்டு போராட்டம்

ஆரணி பேரூராட்சி அலுவலகத்தை வியாபாரிகள் முற்றுகையிட்டு போராட்டம்
X

ஆரணி பேரூராட்சி அலுவலகத்தை வியாபாரிகள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

ஆரணி பேரூராட்சி அலுவலகத்தை வியாபாரிகள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த ஆரணி பேரூராட்சியில் சுமார் 15000க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு 200க்கும் மேற்பட்ட கடைகள் அமைந்துள்ளன. இந்த பேரூராட்சியில் வணிக ரீதியிலான கட்டிடங்களுக்கான குப்பை வரி திடீரென அதிகப்படுத்தப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. இதனை கண்டித்து வியாபாரிகள் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் ஆரணி பேரூராட்சியின் அருகில் உள்ள ஊத்துக்கோட்டை, நாரவாரிக்குப்பம் பேரூராட்சிகளில் வசூலிக்கப்படும் விகிதத்தை விட ஆரணி பேரூராட்சியில் அதிகளவு குப்பை வரி நிர்ணயித்துள்ளதாகவும், இதனால் அனைத்து தரப்பு வியாபாரிகளும் பெருமளவில் பாதிக்கப்படுவார்கள் என தெரிவித்தனர். ஆண்டொன்றுக்கு 1800ரூபாய் குப்பை வரியாக நிர்ணயித்துள்ளதாகவும், அதனை 1200ரூபாயாக குறைக்க வேண்டும் என பலமுறை கோரிக்கை வைத்தும் பேரூராட்சி நிர்வாகம் கண்டு கொள்ளவில்லை என குற்றம் சாட்டினர்.

தங்களுடைய கோரிக்கை ஏற்காத பட்சத்தில் வரும் 2ஆம் தேதி ஆரணி பேரூராட்சியில் கடையடைப்பு நடத்தி தங்களது எதிர்ப்பை பதிவு செய்ய உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர். தொடர்ந்து காவல்நிலையம் மற்றும் பேரூராட்சி நிர்வாகத்திடம் வியாபாரிகள் கடையடைப்பு நடத்துவது தொடர்பான கடிதத்தினை அளித்தனர்.

Tags

Next Story
AI உதவியுடன் வேகமாகவும், சிறப்பாகவும் உங்களுக்கு பிடித்த வீடியோக்களை உருவாக்குங்கள்!