பொன்னேரி தமாகா நிர்வாகி இல்ல திருமண விழாவில் தலைவர் ஜி.கே. வாசன் பேச்சு

பொன்னேரியில் நடந்த தமாகா நிர்வாகி இல்ல திருமண விழாவில் தலைவர் ஜி.கே. வாசன் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்.
TMC President Interview
தமிழ்நாடு மீனவர்கள், மற்றும் படகுகளை விடுவிக்க வெளியுறவுத்துறை, இலங்கை அரசுக்கு மேலும் அழுத்தம் கொடுக்க வேண்டும். நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக தமாகா விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும்.பொன்னேரியில் ஜி.கே.வாசன் பேட்டியளித்தார்.
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி நிர்வாகியின் இல்ல திருமண விழாவில் பங்கேற்ற அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் ஆலோசனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது எனவும், எந்த கட்சியுடன் கூட்டணி என்பது தொடர்பாக முடிவெடுக்க இன்னும் சில நாட்கள் ஆகும் எனவும், தமாகா கூட்டணி தொடர்பாக ஊடங்களில் வெளியாகும் செய்தி தவறானது என்றும் அவை யூகங்களின் அடிப்படையிலானது என்றும் நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் என தெரிவித்தார்.
ஆளும் கட்சி, எதிர்கட்சி உள்ளிட்ட அனைத்து கட்சிகளுமே தேர்தல் பத்திரங்களை பெற்றுள்ளதால் ஒருகட்சியை மட்டும் எப்படி ஊழல் என கூற முடியும் எனவும், யாரையும் தவறாக கூற முடியாது என்றார். காங்கிரஸ் கட்சியில் உள்ளவர்கள் அனைவரும் பாஜகவில் இணைவது குறித்த கேள்விக்கு, ஜனநாயக நாட்டில் எந்த கட்சியில் இருக்க வேண்டும், எந்த கட்சியில் இருக்க கூடாது என்பது அவரவர் தனிப்பட்ட விருப்பம் எனவும், அதற்கு யாரும் யாருக்கும் பாடம் சொல்லி தர வேண்டாம் என தெரிவித்தார்.
தமிழ்நாடு மீனவர்கள், மற்றும் படகுகளை விடுவிக்க வெளியுறவுத்துறை, இலங்கை அரசுக்கு மேலும் அழுத்தம் கொடுக்க வேண்டும் எனவும், மீனவர்கள் அச்சமின்றி மீன் பிடிக்க செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார். 400 இடங்களில் பாஜக வெல்லும் என மோடி கூறி வருவது குறித்த கேள்விக்கு மக்களால் மீது நம்பிக்கை வைத்து பேசுவதாகவும், வாக்காளர்கள் தான் எஜமானர்கள் எனவும், வாக்காளர்களின் முடிவே இறுதி முடிவு எனவும் ஜி.கே.வாசன் தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu