திருவள்ளூர்: ஆரணியில் பேருந்து நிலையம் இல்லாததால் பொது மக்கள் அவதி
ஆரணி யில் பேருந்து நிலையம் இல்லாத காரணத்தினால் பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் சாலை ஓரத்தில் உள்ள கடை கூரைகள் கீழே நின்று பயணம் செய்கின்றனர், எனவே பேருந்து நிலையம் அமைத்து மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆரணி பேரூராட்சியில் சுமார் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு சார்பதிவாளர் அலுவலகம், இந்தியன் வங்கி மற்றும் பேங்க் ஆப் பரோடா, காவல் நிலையம் உள்ளிட்ட தனியார் வங்கிகளும் உள்ளன. இதுமட்டுமல்லாமல் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட இரண்டு பள்ளிகளும் உள்ளன. இப்பள்ளிகளில் சுமார் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்து படித்து செல்கின்றனர்.
இது மட்டுமில்லாமல் ஆரணி சுற்றியுள்ள பத்துக்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. கிராமங்களில் விவசாயம் காய்கறிகள் பூக்கள் கீரை உள்ளிட்டவை விவசாயம் செய்து ஆரணிக்கு கொண்டுவந்து, இங்கிருந்து தான் சென்னை கோயம்பேடு ஊத்துக்கோட்டை கும்மிடிப்பூண்டி செங்குன்றம் உள்ளிட்ட பகுதிகளுக்கு விவசாயிகள் கொண்டு செல்வார்கள். ஆனால் மையமாக கொண்ட இந்த ஆரணி பேரூராட்சியில் தற்போது வரை பேருந்து நிலையம்அமைக்கப்படவில்லை. மேலும் மழைக்காலங்களில் பேருந்துக்காக காத்திருக்கும் பயணிகளும் மற்றும் விவசாயிகள் பள்ளிக்கு வந்து செல்லும் மாணவ மாணவர்கள் உள்ளிட்டோர சாலை ஓரங்களில் உள்ள கடைகளில் கூரை கீழ் நின்று தான் பேருந்துக்காக காத்திருந்து செல்கின்றனர்.
மேலும் வந்து செல்லும் பேருந்துகள் சாலை ஓரத்தில் நின்று செல்வதால் சில நேரங்கள் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. தற்போது வரை இப்பகுதிக்கு பேருந்து நிலையம் அமைத்துத்தர இப்பகுதி மக்களும் பலமுறை மக்கள் பிரதிநிதிகளிடம், அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் எவ்வித பயனில்லை என்று கூறப்படுகிறது.
எனவே மையமாக உள்ள இந்த ஆரணி பகுதிக்கு நிரந்தரமாக பேருந்து நிலையம் அமைத்து தர வேண்டும் என்று அப்பகுதி மக்களும் பள்ளி மாணவ மாணவர்களும் பல்வேறு தரப்பட்ட மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu