திருவள்ளூர்: ஒரக்காடு ஊராட்சியில் என்.எஸ்.எஸ். சிறப்பு முகாம்

திருவள்ளூர்: ஒரக்காடு ஊராட்சியில் என்.எஸ்.எஸ். சிறப்பு முகாம்
X

ஒரக்காடு ஊராட்சியில் வியாசர்பாடி டாக்டர் அம்பேத்கர் அரசினர் கலை கல்லூரி சார்பில் நாட்டு நலப்பணி திட்ட முகாம் நடைபெற்றது.

ஒரக்காடு ஊராட்சியில் வியாசர்பாடி டாக்டர் அம்பேத்கர் அரசினர் கலை கல்லூரி சார்பில் நாட்டு நலப்பணி திட்ட முகாம் நடைபெற்றது.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தாலுக்கா சோழவரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது ஒரக்காடு ஊராட்சி. இந்த ஊராட்சியில் சென்னை வியாசர்பாடி பகுதியில் உள்ள டாக்டர் அம்பேத்கர் அரசினர் கலைக் கல்லூரி சார்பில் நாட்டு நலப்பணி திட்ட முகாம் நடைபெற்றது.

இதனையடுத்து மேற்கண்ட கல்லூரியை சேர்ந்த மாணவ மாணவிகள் பேருந்து நிறுத்தம், சாலையோரம், பள்ளி கட்டிடம், தண்ணீர் தொட்டி, உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தூய்மைப் பணி மேற்கொள்ளப்பட்டது. பின்னர் அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கு உடல் ஆரோக்கியம் குறித்து விளக்கப்பட்டது .

இதில் ஒன்றிய கவுன்சிலர் ஒரக்காடு பாஸ்கரன், ஊராட்சி மன்ற தலைவர் ஒரக்காடு நீலா சுரேஷ், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் பா சீனிவாசன், பொருளாளர் ஜி சீனிவாசன்,ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் லட்சுமணன், மற்றும் வார்டு உறுப்பினர்கள் ஊராட்சி செயலாளர் ரவி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரியைச் சேர்ந்த என்எஸ்எஸ் ஒருங்கிணைப்பாளர் டாக்டர் ரவிச்சந்திரன்,டாக்டர் டி.உமா, டாக்டர் ஆனா ரஞ்சனி செல்லப்பன், டாக்டர் விஜயலட்சுமி உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

Tags

Next Story
ai marketing future