திருவள்ளூர் வடக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளராக மீண்டும் பலராமன் தேர்வு

திருவள்ளூர் வடக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளராக மீண்டும் பலராமன்  தேர்வு
X
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அ.தி.மு.க. அமைப்பு தேர்தலில் விண்ணப்ப மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது.
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளராக மீண்டும் சிறுணியம் பலராமன் தேர்வு செய்யப்பட்டார்.

தமிழகம் முழுவதும் அ.தி.மு.க.வில் இரண்டாம் கட்டமாக அமைப்பு தேர்தலில் மாவட்ட செயலாளர், மாவட்ட பொருளாளர், கழக அவைத்தலைவர் உள்ளிட்ட 9 பதவிக்கான தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது இதன் ஒரு பகுதியாக திருவள்ளூர் வடக்கு மாவட்டத்துக்கு உட்பட்ட கழக அமைப்பு தேர்தல் ஆண்டார் குப்பத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. தேர்தல் பொறுப்பாளராக கழக அமைப்புச் செயலாளர் ஜே.சி.டி. பிரபாகரன் முன்னிலையில் தேர்தலில் போட்டியிட விருப்பம் உள்ளோர் மனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர். திருவள்ளூர் வடக்கு மாவட்ட செயலாளர் பதவிக்கு முன்னாள் பொன்னேரி சட்டமன்ற உறுப்பினரும் திருவள்ளூர் வடக்கு மாவட்ட கழக செயலாளருமான சிறுணியம் பலராமன் மனுவை தாக்கல் செய்தார்.

மேலும் மாவட்ட கழகத் அவைத்தலைவர், மாவட்ட துணைச் செயலாளர் மாவட்ட பொருளாளர் மாவட்ட இணைச்செயலாளர் மாவட்ட பிரதிநிதி என ஒன்பது பதவிகளுக்கு அ.தி.மு.க.வினர் விறுவிறுப்பாக வேட்புமனுக்களை தேர்தல் பொறுப்பாளர்களிடம் தாக்கல் செய்தனர். இந்நிலையில் திருவள்ளூர் வடக்கு மாவட்ட கழக அமைப்பு தேர்தலில் வடக்கு மாவட்டக் கழகச் செயலாளராக பொன்னேரி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சிறுணியம் பலராமன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக தேர்தல் பொறுப்பாளர்கள் அறிவித்தனர்.

பின்னர் வெற்றி பெற்ற அவருக்கு தொண்டர்கள் மலர் மாலை அணிவித்தும் சால்வை அணிவித்தும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர். நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மாவட்ட நிர்வாகிகள் ஒன்றிய நிர்வாகிகள் கிளை கழக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி