பொன்னேரி அருகே கந்த சஷ்டி விழாவில் முருக பெருமானுக்கு திருக்கல்யாணம்

பொன்னேரி அருகே கந்த சஷ்டி விழாவில் முருக பெருமானுக்கு திருக்கல்யாணம்
X

பொன்னியம்மன் ஆலயத்தில் நடைபெற்ற கந்த சஷ்டி விழாவில் முருக பெருமானுக்கு திருக்கல்யாணம் நடத்தி தீபாராதனை காட்டப்பட்டது.

பொன்னேரி அருகே பொன்னியம்மன் ஆலயத்தில் நடந்த கந்தசஷ்டி விழாவில் நிறைவாக முருகப்பெருமானுக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது.

பொன்னேரி அருகே அருள்மிகு ஸ்ரீ பொன்னியம்மன் ஆலயத்தில் கந்த சஷ்டி விழாவின் நிறைவாக முருகப்பெருமானுக்கு திருக்கல்யாண வைபோகம் சிறப்புடன் நடைபெற்றது. இதில் பெருந்திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தொகுதி, திருவேங்கடபுரத்தில் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ பொன்னியம்மன் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் கடந்த 13 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி கந்த சஷ்டி விழா வெகு விமரிசையாக நடைபெற்ற வந்த நிலையில் நாள்தோறும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரங்கள் நடைபெற்று,தீப, தூபாராதனையுடன் நடைபெற்று வந்தது.


இதனையடுத்து நேற்று மாலை உள்புற பாடும், மகா தீப ஆராதனையும் நடைபெற்ற நிலையில் கந்த சஷ்டியின் நிறைவாக ஆலய வளாகத்தில் வள்ளி, தெய்வானை, உற்சவர்களுக்கு பல்வேறு அபிஷேகங்கள் செய்யப்பட்டு பட்டு உடைகளாலும், திரு ஆபரணங்களாலும், வண்ண மலர்களால் அலங்காரம் செய்து திருக்கல்யாண வைபோகம் வெகு விமரிசையாக நடைபெற்றது.

இதனை தொடர்ந்து தீப ஆராதனையும், பூப்பந்து உருட்டல் நிகழ்வு மற்றும் மொய் எழுதுதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் பொன்னேரி சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து பெரும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பக்தியுடன் முருகப்பெருமானை வழிபட்டனர். கோவில் நிர்வாகம் சார்பில் விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் அன்னதான பிரசாதங்கள் வழங்கப்பட்டது.

Tags

Next Story