சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் திருக்கல்யாணம்

சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் திருக்கல்யாணம்
X

வள்ளி, தேவசேனாவுக்கு ஆகம முறைப்படி மங்கலநாண் சூட்டப்பட்டது.

Siruvapuri Shri Balasubramaniaswamy Temple - சிறுவாபுரி பாலசுப்ரமணியர் சுவாமி திருக்கோயிலில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு முருகன் வள்ளி தேவசேனா திருக்கல்யாணம். பக்தர்கள் திரளாக பங்கேற்றனர்.

Siruvapuri Shri Balasubramaniaswamy Temple -திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த சிறுவாபுரியில் அருள்மிகு பாலசுப்ரமணியர் திருக்கோவில் அமைந்துள்ளது.

இக்கோவிலில் சுமார் 19 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேக விழா கணபதி பூஜையுடன் தொடங்கி ஆறுகால யாகசாலை பூஜை நடத்தப்பட்டதை தொடர்ந்து இன்று காலை கும்பாபிஷேகம் வெகு கோலாகலமாக நடத்தப்பட்டது.

விழாவின் உச்சகட்டமாக முருகப்பெருமான், வள்ளி, தேவசேனா திருக்கல்யாண வைபவம் விமரிசையாக நடைபெற்றது. பட்டாடையில் அலங்கரிக்கப்பட்ட முருகபெருமானுக்கும் வள்ளி தேவசேனாவுக்கும் சாஸ்திர சம்பிரதாயப்படி பக்தர்கள் சீர்வரிசை பொருட்களை கொண்டு வந்தனர். இதை தொடர்ந்து வேத மந்திரங்கள் ஓத மேளதாளம் முழங்க சிவாச்சாரியார்கள் முன்னிலையில் வள்ளி, தேவசேனாவுக்கு ஆகம முறைப்படி மங்கலநாண் சூட்டப்பட்டது. இதனை தொடர்ந்து மாலை மாற்றும் வைபவம் நடந்தேறியது.

திருக்கல்யாணத்தின் நிறைவாக முருகப்பெருமானுக்கு மஹாதீபாராதனை காட்டப்பட்டது. இவ்விழாவில் திரளான பக்தர்கள் உற்சாகத்துடன் கலந்து கொண்டனர். இதனையடுத்து மலர்களால் அலங்கரிக்கப்பட்ட முருகப்பெருமானை தோளில் சுமந்து வந்த பக்தர்கள் நடனமாடியபடி ஒய்யாரமாக கோவிலை சுற்றி வலம் வந்தனர். தொடர்ந்து கிராமத்தில் உள்ள வீதிகளில் முருகப்பெருமான் வீதிஉலா சென்றார்.

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!