காரனோடை கொசஸ்தலை ஆற்றில் குளிக்கச் சென்ற 3 சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு

காரனோடை கொசஸ்தலை ஆற்றில் குளிக்கச் சென்ற 3 சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு
X

பைல் படம்.

சோழவரம் அருகே காரனோடை கொசஸ்தலை ஆற்றில் குளிக்கச் சென்ற 3 சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் அருகே கொசஸ்தலை ஆற்றில் மீன் பிடித்ததாக கூறி சென்ற 3 சிறுவர்கள் சடலமாக மீட்கப்பட்டனர்.

காரனோடை பகுதியைச் சேர்ந்த ரஹமத் (15), அர்ஜுன் (13) மற்றும் திருவள்ளூர் ஈக்காடு பகுதியை சேர்ந்த சத்யா (14) ஆகிய 3 சிறுவர்கள் நேற்று மாலை 4மணியளவில் மீன் பிடித்ததாக கூறி சென்றுள்ளனர். அவர்கள் இரவு வரை வீடு திரும்பாததால் சோழவரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

புகாரின் பேரில் அங்கு விரைந்த போலீசார், ஆற்றில் சிறுவர்கள் உடைகள் இருப்பதை கண்டு செங்குன்றம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

தீயணைப்பு வீரர்கள் பல மணி நேரம் போராடி நள்ளிரவில் 3 பேர் சடலமாக மீட்கப்பட்டனர். பின்னர் உடற்கூறு ஆய்வுக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி சோழவரம் காவல்துறையினர் வழக்கு பதவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!