பொன்னேரி பச்சையம்மன் எல்லை அம்மன் கோவிலில் ஆறாம் ஆண்டு தீமிதி திருவிழா

பொன்னேரி பச்சையம்மன் எல்லை அம்மன் கோவிலில் ஆறாம் ஆண்டு தீமிதி திருவிழா
X

சிறப்பு அலங்காரத்தில் பச்சையம்மன் மற்றும் தீ மிதித்த பக்தர்கள்.

பொன்னேரி அருகே பச்சையம்மன் எல்லை அம்மன் கோவிலில் ஆறாம் ஆண்டு தீமிதி திருவிழாவில் பக்தர்கள் தீ மிதித்து வழிபாடு செய்தனர்.

பொன்னேரி அடுத்த காட்டாவூர் ஊராட்சியில் உள்ள பச்சையம்மன் எல்லை அம்மன் கோவிலில் ஆறாம் ஆண்டு தீமிதி திருவிழாவில் நூற்றுக்கணக்கான சிறியவர் பெரியவர் என தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தொகுதி மீஞ்சூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்டது காட்டாவூர் ஊராட்சி. இந்த ஊராட்சியில் புகழ்பெற்ற பழமை வாய்ந்த அருள் மிகு ஸ்ரீ பச்சையம்மன், ஸ்ரீ எல்லையம்மன் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் ஆறாம் ஆண்டு தீமிதி விழா நடைபெற்றது.

இதனையடுத்து மேற்கண்ட ஊராட்சியை சேர்ந்த கிராம பொதுமக்கள் கடந்த 15 தினங்களாக காப்பு கட்டி விரதம் இருந்து நேற்று தீமிதித்து நேர்த்திக் கடன் செலுத்தினர். இந்த தீமிதி விழாவில் சிறுவர் முதல் பெரியவர் வரை சுமார் நூற்றுக்கணக்கானோர் தீமிதித்தனர். இத் தீமிதி திருவிழாவை சுற்றுப்பகுதியைச் சேர்ந்த ஆயிரக் கணக்கன மக்கள் கண்டு களித்தனர்.

இத்திமிதி திருவிழாவிற்கு தமிழ் நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு குழு சார்பில் பொன்னேரி தீயணைப்பு நிலைய அலுவலர் த. சம்பத் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடு பட்டனர்.

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது