பைக் ரேஸில் ஈடுபட்ட மாணவர்களை போலீசார் பிடித்து எச்சரித்து அனுப்பி வைப்பு!

பைக் ரேஸில் ஈடுபட்ட மாணவர்களை போலீசார் பிடித்து எச்சரித்து அனுப்பி வைப்பு!

படம்

பொன்னேரி அருகே பைக் ரேஸில் ஈடுபட்ட 12 கல்லூரி மாணவர்களை போலீசார் பிடித்து எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர்.

மீஞ்சூர் - வண்டலூர் வெளிவட்ட சாலையில் பைக் ரேஸில் ஈடுபட முயன்ற 12கல்லூரி மாணவர்களை அழைத்து கண்டித்த காவல்துறை. பெற்றோரை வரவழைத்து எச்சரித்து அனுப்பினர்.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த மீஞ்சூர் - வண்டலூர் வெளிவட்ட சாலை அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் பெரும்பாலும் வெறிச்சோடி காணப்படுகிறது. இந்த சாலையில் அவ்வபோது இருசக்கர வாகனங்களில் இளைஞர்கள் சாகசங்களில் ஈடுபடுவதும், பைக் ரேஸ் செல்வதும் வாடிக்கையாக உள்ளது.

மீஞ்சூர் அருகே சிலர் பைக் ரேஸில் ஈடுபடுவதாக கிடைத்த தகவலின் பேரில் மீஞ்சூர் காவல்துறையினர் சென்றபோது 6பைக்குகளில் 12கல்லூரி மாணவர்கள் சாகசங்களில் ஈடுபட முயன்றனர். அப்போது அங்கு சென்ற காவல்துறையினர் இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.

தொடர்ந்து கல்லூரி மாணவர்களுக்கு அறிவுரை வழங்கிய காவல்துறையினர் பெற்றோரை வரவழைத்து இனிவரும் நாட்களில் மீண்டும் ரேஸில் ஈடுபட்டால் வழக்கு பதிவு, கைது என கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனர். கல்லூரி மாணவர்களுக்கு அறிவுரை வழங்கி எச்சரித்த காவல்துறையினர் தொடர்ந்து இருசக்கர வாகனங்களை பெற்றோரிடம் ஒப்படைத்து மாணவர்களை அனுப்பி வைத்தனர்.

Tags

Next Story