கட்சி அறிவிக்கும் வேட்பாளரை வெற்றி பெற செய்ய வேண்டும்: திருவள்ளூர் அதிமுக செயலர் பேச்சு

கட்சி அறிவிக்கும் வேட்பாளரை வெற்றி பெற செய்ய வேண்டும்: திருவள்ளூர் அதிமுக செயலர் பேச்சு
X

 கும்மிடிப்பூண்டி  எலாவூர் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ர அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

அதிமுக சார்பில் கட்சி தலைமை யிடம் அறிவிக்கும் வேட்பாளரை வெற்றி பெற செய்ய வேண்டும் என நிர்வாகிகளை திருவள்ளூர் வடக்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் எம்எல்ஏவுமான பலராமன் கேட்டுக்கொண்டார்.

தமிழக தேர்தல் ஆணையம் உள் ளாட்சித் பகுதிகளுக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு வேட்பு மனுக்கள் பெறப்பட்டு வருகின்றன இதனையடுத்து வரும் பிப்ரவரி மாதம் 19ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது .

அதன்படி பேரூராட்சி நகராட்சி மாநகராட்சி உள்ளிட்ட பகுதிகளு க்கு வார்டு உறுப்பினர்கள் தேர்தல் நடைபெற்று பேரூராட்சி,நகராட்சி.மாநகராட்சிகளூக்கு தலைவர் துணைத் தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.இந்நிலையில் பல்வேறு பகுதியில் சுயேட்சை வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்து வருகின்றனர். இதனையடுத்து முக்கிய கட்சிகள் தங்களது வேட்பாளர்கள் தேர்வு குறித்த ஆலோசனைக் கூட்டம் நட த்தி வருகின்றனர்.

அதன்படி திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள ஊத்துக்கோட்டை, ஆரணி, கும்மிடிப்பூண்டி, மீஞ்சூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பேரூராட்சிகளுக்கும் பொன்னேரி நகராட்சிக்கு உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகிறது. இதனையடுத்து அதிமுக திருவள்ளூர் வடக்கு மாவட்டம் சார்பில் வெற்றி வேட்பாளர்களை தேர்வு குறித்து அந்தந்த பகுதிகளில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது.

அதன்படி நேற்று கும்மிடிப்பூண்டி பேரூராட்சிக்காக கும்மிடிப்பூண்டி அடுத்த எலாவூர் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது . இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு திருவள்ளூர் வடக்கு மாவட்ட செயலாளரும் பொன்னேரி தொகு தி முன்னாள் எம்எல்ஏவுமான சிறுனியம் பலராமன் தலைமை வகித்தார்.கும்மிடிப்பூண்டி நகர செயலாளர் மு.க.சேகர் முன்னிலையில் வகித்தார்.

மாவட்டச் செயலாளரும் முன்னாள் எம் எல்ஏ வுமான சிறுனியம் பலராமன் பேசியதாவது:கட்சி தலைமை யாரை வேட்பாளராக அறிவிக்கிறார்களோ அவரை வெற்றி பெறச்செய்ய தீவிரமாக பாடுபட வேண்டும் போட்டியிட வாய்ப்பு கிடைக்கவில்லை என்பதற்காக சுயேச்சையாக யாரும் போட்டியிட கூடாது.அப்போது தான் உள்ளாட் சித் தேர்தலில் நமது கட்சி பெரும்பான்மை இடங்களைப்பெற்று பேரூராட்சி தலைவராகவும் நகராட்சித் தலைவராகவும் வெற்றி பெற முடியும்.

நமது மாவட்டத்தில் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு நடந்த இடைதேர்தலில் நமது வேட்பாளரை கட்சியினர் அரும்பாடுப்பட்டு வெற்றிப் பெறச்செய்தனர்.அதைப்போல் இப்பொழுது நடக்கும் உள்ளாட்சி தேர்தலிலும் நமதுகட்சி தலைமை அறிவிக்கும் வேட்பாளரின் வெற்றிக்கு எந்த பாகுபாடுமின்றி பணியாற்ற வேண்டும் என்றார் திருவ ள்ளூர் வடக்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் எம்எல்ஏ வுமான சிறுனியம் பலராமன்.

கும்மிடிப்பூண்டி பேரூராட்சி சார் பில் எலாவூர் பகுதியில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் அதிமுக கும்மிடிப்பூண்டிதொகுதிமுன்னாள் எம்எல்ஏ விஜயகுமார்,பொதுக்குழு உறுப்பினர் அபிராமன், கும்மிடிப் பூண்டி ஒன்றிய செயலாளர் கோபால் நாயுடு, கும்மிடிப்பூண்டி சேர்மன் சிவகுமார், திருவள்ளூர் வடக்கு மாவட்ட இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை மாவட்ட செயலாளர் டி.சி.மகேந்திரன், மாணவரணி மாவட்ட இணைச்செயலா ளர் டேவிட்சுதாகர், அம்மா பேரவை இணைச் செயலாளர் எஸ். டி. டி. ரவி, முல்லைவேந்தன், மாவட்ட நிர்வாகி புது கும்மிடிப்பூண்டி சுகுமாரன், புதுகும்மிடிப்பூண்டி ஊராட்சி மன்ற துணைத்தலைவர் எல்லப்பன், கும்மிடிப்பூண்டி நகர மகளிர் அணிச் செயலாளர் சுசீலாமற்றும் கட்சி நிர்வாகிகள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.


Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்