மின் கட்டண உயர்வை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

மின் கட்டண உயர்வை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

பொன்னேரியில் மின்கட்டண உயர்வை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பொன்னேரியில் மின்கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அண்மையில் தமிழ்நாட்டில் மின் கட்டணத்தை உயர்த்தி அரசு அறிவிப்பை வெளியிட்டது. இந்த மின் கட்டண உயர்வு என்பது ஜூலை 1ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பை வெளியிட்டது. இதற்கு பல தரப்பில் இருந்தும் கண்டனங்கள், எதிர்ப்புக்கள் வலுத்து வருகின்றன. பல்வேறு அரசியல் கட்சிகள் இதனை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.

மின் கட்டண உயர்வை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 3வது முறையாக மின் கட்டணத்தை உயர்த்தியதை கண்டித்து கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

மின் கட்டண உயர்வை உடனே திரும்ப பெற வேண்டும், தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தது போல மாதம், மாதம் மின் கட்டணத்தை நடைமுறைப்படுத்த வேண்டும், ஒன்றிய அரசின் நிபந்தனைக்கு அடிபணிய கூடாது என ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

Tags

Next Story