பொன்னேரி நகராட்சியில் பாதாள சாக்கடை கிட்ட பணிகளை மேலாண்மை இயக்குனர் ஆய்வு

பொன்னேரி நகராட்சியில் பாதாள சாக்கடை திட்டப் பணிகளை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மேலாண்மை இயக்குனர் ஆய்வு செய்தார்.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி நகராட்சியில் சுமார் 40 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த நகராட்சியில் பாதாள சாக்கடை திட்டம் கொண்டுவர இப்பகுதி மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்த நிலையில் திட்டம் கொண்டுவரப்பட்டு இத்திட்டத்தின் கீழ் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாகவே இந்த பாதாள சாக்கடை திட்டப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
அதனை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மேலாண்மை இயக்குனர் தட்சிணாமூர்த்தி ஐ.ஏ.எஸ். நடைபெற்று வரும் பணிகளை ஆய்வு செய்தார், அப்போது பொன்னேரி நகராட்சியில் நடைபெற்று வரும் பணிகளை விரைந்து முடிக்க பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பொன்னேரி நகராட்சி மன்ற தலைவர் டாக்டர்.பரிமளம் விஸ்வநாதன் வழங்கினார்.
அதில் நகராட்சியில் நடைபெற்று வரும் பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டிற்காக கொண்டு வர வேண்டும் எனவும்,அக்டோபர் 2023 வடகிழக்கு பருவமழைக்கு முன் பணிகளை முழுமையாக முடிக்க உறுதி செய்ய வேண்டும் எனவும் சில இடங்களில் விடுபட்டு போன பணிகளை உடனடியாக முடிக்க ஆவன செய்ய வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்ய வந்த தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மேலாண்மை இயக்குனர் தட்சணாமூர்த்தியிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து தட்சிணா மூர்த்தி எல்லா இடங்களுக்கும் சென்று நேரடியாக பார்வையிட்டு அறிவுரை வழங்கினார். இதில் நகராட்சி ஆணையர் கோபிநாத், நகர்மன்ற துணைத் தலைவர் விஜயகுமார்,மற்றும் பாதாள சாக்கடை திட்ட அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu