பழவேற்காடு அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை

பழவேற்காடு அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை
X

பைல் படம்

பழவேற்காடு அருகே பூட்டி கிடந்த வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணம் கொள்ளை குறித்து போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தொகுதி பழவேற்காடு அடுத்த கம்மாளமடம் பகுதியை சேர்ந்தவர் சரஸ்வதி. உடல்நல குறைவு காரணமாக இவர் கடந்த 14ஆம் தேதி வீட்டை பூட்டி கொண்டு செங்குன்றத்தில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் வீடு திரும்பிய போது இவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டது கண்டு அதிர்ச்சியடைந்து உள்ளே சென்று பார்த்தார். அப்போது பீரோ உடைக்கப்பட்டு அதில் வைக்கப்பட்டிருந்த 20சவரன் தங்க நகைகள், 250கிராம் வெள்ளி பொருட்கள், 25000 ரூபாய் ரொக்கம் கொள்ளை போனது தெரிய வந்தது.

இதுகுறித்து சரஸ்வதி திருப்பாலைவனம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை வைத்து வழக்கு பதிவு செய்து கொலையாளிகளை குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!