பருவ மழையை எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகம் தயார்; ஆட்சியர் உறுதி

பருவ மழையை எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகம் தயார்;  ஆட்சியர் உறுதி
X

செய்தியாளர்கள் சந்திப்பில் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர். அருகில் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி.ஜெ.கோவிந்தராஜன்.

பருவ மழையை எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகம் தயார் நிலையில் உள்ளதாக திருவள்ளூர் ஆட்சியர் பிரபு சங்கர் தெரிவித்துள்ளார்.

பொன்னேரியில் ஆறு, ஏரிகளை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் வருகின்ற பருவமழையை எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகம் தயார் நிலையில் உள்ளதாக செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

கடந்த ஆண்டு பெய்த பெருமழை மற்றும் வெள்ள பாதிப்பால் திருவள்ளூர் மாவட்டத்தில் பல பகுதிகளில் பாதிப்பு ஏற்பட்டது.இதனையடுத்து ஆரணியாறு, கொசஸ்தலை ஆறு உள்ளிட்ட பகுதிகளில் ரூ. 350 கோடியில்வெள்ள தடுப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், திருவள்ளூர் ஆட்சியர் பிரபு சங்கர், சோழவரம் ஏரி, கொசஸ்தலை ஆறு, ஆரணியாறு உள்ளிட்ட ஆய்வு செய்தார்.

அப்போது தத்தைமஞ்சி பகுதியில் ஆரணியாற்றின் கரையை ரூ. 50 கோடி மதிப்பீட்டில் பலப்படுத்தும் பணிகளை ஆய்வு செய்த அவர், செய்தியாளர்களிடம் பேசுகையில்,

திருவள்ளூர் மாவட்டத்தில் பருவ மழையை எதிர்கொள்ள அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் தயார் நிலையில் உள்ளதாகவும், மாவட்டம் முழுவதும் ரூ.350 கோடி மதிப்பீட்டில் மழைக்கால முன்னெச்சரிக்கை பணிகள் நடந்து வருவதாகவும், தென்மேற்கு பருவ மழையால் பாதிப்பு இல்லை எனவும், வீடுகளோ, கால்நடைகளோ உயிரிழப்பு ஏற்பட்டால் உரிய நிவாரணம் வழங்கப்படும் எனவும் தெரிவித்தார். இந்த ஆய்வின் போது கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி.ஜெ. கோவிந்தராஜன் அரசு அதிகாரிகள் உட்பட பலர் உடன் இருந்தனர்.

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!