கொசஸ்தலை ஆற்றின் கரையோர பணிகளை ஆய்வு செய்தார் தலைமை செயலாளர்

கொசஸ்தலை ஆற்றின் கரையோரத்தை பலப்படுத்தும் பணிகளை தலைமை செயலாளர் இறையன்பு ஆய்வு செய்தார்.
Kosasthalaiyar River -பொன்னேரி அருகே கொசஸ்தலை ஆற்றின் கரை சீரமைப்பு பணிகளை தலைமைச்செயலாளர் இறையன்பு நேரில் ஆய்வு. 80 சதவீதம் முடிவடைந்த பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
கடந்தாண்டு வடகிழக்கு பருவமழையின் போது கொசஸ்தலை ஆற்றில் பல்வேறு இடங்களில் கரைகள் உடைந்து வெள்ளநீர் கிராமங்களில் புகுந்து மக்களின் வாழ்வாதாரத்தை சின்னாபின்னமாக்கி பெரும் அளவில் சேதத்தை ஏற்படுத்தியது. அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரடியாக வந்து ஆற்றில் பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு ஆற்றங்கரையை முழுமையாக சீரமைக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து கொசஸ்தலை ஆற்றின் கரை சீரமைப்பு பணிகள் ரூபாய் 15.கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வருகின்றது. திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த வெள்ளிவாயல்சாவடி பகுதியில் செல்லும் கொசஸ்தலை ஆற்றில் நடைபெற்று வரும் கரை பலப்படுத்தும் பணிகளை தலைமைச்செயலாளர் இறையன்பு, நீர்வளத்துறை முதன்மை செயலாளர் சந்தீப் சக்சேனா, சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங்பேடி ஆகியோருடன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது கரையின் சீரமைப்பு பணிகள் 80 சதவீதம் தற்போது முடிவடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். எஞ்சியுள்ள பணிகள் குறித்து அதிகாரிகளை கேட்டு அறிந்த தலைமை செயலாளர் இறையன்பு இம்மாத இறுதியில் வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ள நிலையில் வெள்ள பாதிப்பு ஏற்படாத வகையில் அனைத்து பணிகளையும் விரைந்து முடிக்குமாறு அதிகாரிகளுக்கு அப்போது அறிவுறுத்தினார். இதேபோல் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் சென்று பணிகளை பார்வையிட்டார்.
சென்னை மற்றும் காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்டங்களை பொறுத்தவரை கடந்த ஆண்டு மற்றும் அதற்கு முந்தைய ஆண்டுகளில் ஏற்பட்ட வெள்ளத்தினால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். குறிப்பாக ஏரி மற்றும் குளங்கள், நீர்வழிப்பாதைகளில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட கட்டிடங்களால் மழை நீர் வடிந்து செல்ல முடியாமல் இந்த நிலை ஏற்பட்டது. இதன் காரணமாக பல இடங்களில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு நீர் வழிப்பாதைகள் தண்ணீர் தங்கு தடையின்றி செல்லும் வகையில் மாற்றி அமைக்கப்பட்டு உள்ளன. இந்த நிலையில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவ மழை இன்னும் தொடங்குவதற்கு முன்பாகவே சென்னை மற்றும் புறநகர்பகுதிகளில் மழை பரவலாக பெய்து உள்ளது. இதனால் வெள்ளப்பாதிப்பில் இருந்து மக்களை காப்பாற்ற தமிழக அரசு துரித நடவடிக்கை எடுத்து வருகிறது.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu