தை வெள்ளி: பொன்னேரி அம்மனுக்கு 108 திருவிளக்கு பூஜை வழிபாடு

தை வெள்ளி: பொன்னேரி அம்மனுக்கு 108 திருவிளக்கு பூஜை வழிபாடு
X

திருவேங்கடாபுரம் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு பொன்னியம்மன் ஆலயத்தில் நடந்த திருவிளக்கு  பூஜை

தை வெள்ளி திருவிளக்கு பூஜையில் குங்கும அர்ச்சனை, புஷ்பாஞ்சலி உள்ளிட்ட பல்வேறு வழிபாடுகள் நடத்தப்பட்டது

பொன்னேரி அருகே தை வெள்ளி முன்னிட்டு அம்மனுக்கு 108திருவிளக்கு பூஜை. பெண்கள் விளக்குகள் ஏற்றி, குங்கும அர்ச்சனை செய்து சிறப்பு வழிபாடு.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே தை வெள்ளி முன்னிட்டு 108 திருவிளக்கு பூஜை வெகு விமரிசையாக நடைபெற்றது. திருவேங்கடாபுரம் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு பொன்னியம்மன் ஆலயத்தில் 7ஆம் ஆண்டு தை வெள்ளிக்கிழமையை முன்னிட்டு 108 திருவிளக்கு பூஜை வெகு விமரிசையாக நடைபெற்றது. அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அம்மனை வழிபாடு செய்து பெண்கள் 108விளக்குகளை ஏற்றி பூஜை செய்தனர். குங்கும அர்ச்சனை, புஷ்பாஞ்சலி உள்ளிட்ட பல்வேறு வழிபாடுகள் நடத்தி முடிக்கப்பட்ட பின்னர் அம்மனுக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!