கல்லூரிக்கு செல்வதாக கூறிய இளம்பெண் மாயம்

கல்லூரிக்கு செல்வதாக கூறிய இளம்பெண் மாயம்
X

திருவள்ளூர் மாவட்டம் நந்தியம்பாக்கம் கிராமத்தில் கல்லூரிக்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற 19வயது மகள் மாயமானார்.

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நந்தியம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் சீனிவாசன் வயது (46). இவரது 19 வயது மகள் கடந்த சில தினங்களுக்கு முன் காலை 8 மணியளவில் காலை வழக்கம் போல் கல்லூரிக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றுள்ளார். ஆனால் மீண்டும் வீட்டுக்கு திரும்பி வராததால் அதிர்ச்சி அடைந்த அவரது தந்தை சீனிவாசன் அவரது நண்பர்கள், தோழிகள், உறவினர்கள் வீடுகளில் தேடிப்பார்த்துள்ளார். எங்கும் கிடைக்காததால் நேற்று மீஞ்சூர் காவல்நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!