தாசில்தாரை தரக்குறைவாக பேசிய 10 பேர் மீது வழக்கு

தாசில்தாரை தரக்குறைவாக பேசிய 10 பேர் மீது வழக்கு
X

தாமரைப்பாக்கம் கூட்டுச்சாலையில் தாசில்தாரை தரக்குறைவாக பேசியதாக பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் உள்ளிட்ட 10 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி தொகுதி சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் சத்தியமூர்த்தி மற்றும் அக் கட்சியை சேர்ந்த கவுன்சிலர் அன்புசெழியன் மற்றும் 8 பேர் அனுமதியின்றி தாமரைப்பாக்கம் கூட்டுச்சாலையில் நேற்று இரவு ஓட்டு சேகரித்தனர். இதனால் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் முருகானந்தம் பிரச்சாரம் செய்ய அனுமதி பெற்றீர்களா என்று கேட்டு அந்த பிரச்சார வேனை ஆய்வு செய்தாராம்.

இதனால் ஆத்திரமடைந்த பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் சத்தியமூர்த்தி உள்பட 10 பேர் கொண்ட கும்பல் தாசில்தாரை, தரக்குறைவான வார்த்தைகளால் திட்டினார்களாம். இந்த சம்பவம் குறித்து வெங்கல் காவல் நிலையத்தில் முருகானந்தம் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் இச்சம்பவம் குறித்து 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags

Next Story
நீதிமன்றம் உத்தரவிட்டது பாதிக்கப்பட்டவருக்கு அதிகபட்ச இழப்பீடு வழங்க உத்தரவு..!