பள்ளி திறப்பு! பொன்னேரியில் ஆலோசனைக் கூட்டம்!

பள்ளி திறப்பு! பொன்னேரியில் ஆலோசனைக் கூட்டம்!
X
பள்ளி மாணவர்கள் பாதுகாப்பு கருதி காலை மாலை பள்ளி நேரங்களில் கனரக வாகனங்கள் தடை குறித்து ஆலோசனைக் கூட்டம்

பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலகத்தில். பள்ளி மாணவர்கள் பாதுகாப்பு கருதி காலை, மாலை நேரங்களில் கனரக வாகனங்கள் தடை செய்வது குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து திங்களன்று 6ஆம் வகுப்பு முதல் 12.ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கப்பட உள்ளன. கல்வியாண்டில் முதல் நாள் பள்ளிகள் திறக்கப்படுவதை முன்னிட்டு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் எம்எல்ஏ துரை.சந்திரசேகர், சார் ஆட்சியர் ஐஸ்வர்யா ஆகியோர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

காவல்துறை, வருவாய்த்துறை, நெடுஞ்சாலைத்துறை உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

பள்ளி மாணவர்கள் பாதுகாப்பு கருதி காலை, மாலை நேரங்களில் பொன்னேரி, மீஞ்சூர் நகர் பகுதிகளில் கனரக வாகனங்களின் போக்குவரத்தை தடை செய்து மாணவர்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என அதிகாரிகளுக்கு எம்எல்ஏ அறிவுறுத்தினார். இதில் பல்வேறு அரசுத்துறை சார்ந்த அதிகாரிகளும் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ai ethics in healthcare