ஞாயிறு - வன்னிப்பாக்கம் இடையே மேம்பாலம் கோரி எம்பி.,யிடம் மனு

ஞாயிறு - வன்னிப்பாக்கம் இடையே மேம்பாலம் கோரி எம்பி.,யிடம் மனு
X

மேம்பாலம் அமைத்து தரக்கோரி எம்பி., யிடம் மனு அளித்த மாவட்ட கவுன்சிலர் உள்ளிட்டோர்.

ஞாயிறு -வன்னிப்பாக்கம் இடை யே கொசஸ்தலை ஆற்றில் மேம்பாலம் அமைத்து தரக்கோரி எம்பி., யிடம் மாவட்ட கவுன்சிலர் உள்ளிட்டோர் மனு அளித்தனர்.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தாலுகா, சோழவரம் ஊராட்சிஒன்றியத்திற்கு உட்பட்டது ஞாயிறு, மற்றும் வன்னிப்பாக்கம் ஊராட்சிகள்.

இந்த ஊராட்சி பகுதிகளுக்கு இடையே உள்ள கொசஸ்தலை ஆற்றில் மேம்பாலம் அமைத்து தரக்கோரி திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஜெயக்குமாரிடம், மாவட்ட கவுன்சிலர் தேவி தயாளன் தலைமையில் தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் என்.எஸ்.பிரதாப் சந்திரன், ஊராட்சி மன்ற தலைவர்கள் அருமந்தை விக்ரமன், மாபூஸ்கான்பேட்டை சண்முகம், திருநிலை அம்மு சிவகுமார், ஞாயிறு ஊராட்சி மன்ற துணை தலைவர் ஜனார்த்தனன், திமுக செயலாளர் வேணுகோபால், ஞாயிறு ஊராட்சி மன்ற உறுப்பினர் சதீஷ், ஞாயிறு வெங்கடேசன், கண்ணம்பாளையம் முனுசாமி உள்ளிட்டோர் கோரிக்கை மனு அளித்தனர்.

இம்மனு மீது உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக எம்பி தெரிவித்துள்ளார். முடிவில் மாவட்ட திட்ட அதிகாரியிடமும் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்