மீஞ்சூர் அருகே எரிவாயு ஏற்றி சென்ற வாகனத்திலிருந்து திடீர் கசிவு

மீஞ்சூர் அருகே எரிவாயு ஏற்றி சென்ற வாகனத்திலிருந்து திடீர் கசிவு
X
மீஞ்சூர் அருகே எரிவாய் ஏற்றி சென்ற வாகனத்தில் இருந்து எரிவாயு கசிவு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தொகுதி, மீஞ்சூர் அடுத்த கொண்டக்கரை பகுதியில் இயற்கை எரிவாயு ஏற்றி கொண்டு லாரி சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென லாரியில் இருந்து எரிவாயு கசிந்துள்ளது. தண்ணீர் பீய்ச்சி அடிப்பது போல லாரியில் இருந்து எரிவாயு கசிந்தால் வாகனத்தை சாலையோரத்தில் நிறுத்திவிட்டு லாரி ஓட்டுநர் அலறியடித்தபடி இறங்கி ஓடினார்.

இச்சம்பவம் பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக இதுகுறித்து தீயணைப்பு துறைக்கு அளிக்கப்பட தகவலின் பேரில் இரண்டு வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. லாரியில் எரிவாயு கசிந்ததால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags

Next Story
பெருந்துறையில் புகையிலை விற்பனைக்கு எதிராக கடைகளுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்