அகில இந்திய அளவில் நீட் தேர்வில் முதல் இடம் பிடித்து மாணவன் சாதனை

அகில இந்திய அளவில் நீட் தேர்வில் முதல் இடம் பிடித்து மாணவன் சாதனை
X

நீட் தேர்வில் அகில இந்திய அளவில் சாதனை படைத்த மாணவருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

பொன்னேரி அருகே நீட் நுழைவு தேர்வில் அகில இந்திய அளவில் மாணவன் முதலிடம் பிடித்து சாதனை படைத்தார்.

பொன்னேரி அருகே தனியார் பள்ளி மாணவன் நீட் நுழைவு தேர்வில் அகில இந்திய அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

  1. ராமநாதபுரத்தை சேர்ந்த பக்கிரிசாமி - சண்முகவல்லி தம்பதியரின் மகன் பி.ஸ்ரீராம். பக்கிரிசாமி சிங்கப்பூரில் கட்டுமான நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் நிலையில் தாய் குடும்ப தலைவியாக உள்ளார். சிபிஎஸ்இ வழியில் பத்தாம் வகுப்பு வரை ராமநாதபுரத்தில் தனியா் பள்ளியில் படித்த ஸ்ரீராம், திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அருகே பஞ்செட்டியில் உள்ள தனியார் பள்ளியில் +1,+2 கல்வியுடன் ஒருங்கிணைந்த நீட் தேர்வுக்கான பயிற்சியிலும் ஈடுபட்டார். சிபிஎஸ்இ பிளஸ் டூ தேர்வு முடிவுகளில்,500க்கு,480 மதிப்பெண்கள் பெற்ற ஸ்ரீராம் நீட் நுழைவு தேர்வில் 720க்கு 720மதிப்பெண்கள் பெற்று தேசிய அளவில் முதலிடம் பிடித்து அசத்தி உள்ளார்.
  2. தேசிய அளவில் முதலிடம் பிடித்த சாதனை மாணவருக்கு பள்ளியில் சக மாணவர்கள் ஆசிரியர்கள் பாராட்டு தெரிவித்தனர் கௌரவப்படுத்தினார்.பின்னர் இது குறித்து மாணவன் பேசும்போது மற்றவர்கள் நீட் தேர்வு கடினமாக இருப்பதாக நினைப்பது போல் அல்ல என்றும் நீட் தேர்வு எளிதாக இருப்பதாகவும், விருப்பத்துடன் படித்தால் அனைவரும் எளிதில் வெற்றி பெறலாம் என சாதனை மாணவர் ஸ்ரீராம் தெரிவித்தார்.

Tags

Next Story