தெரு விளக்கு மின்கம்பத்தில் மின்சாரம் பாய்ந்து மாணவன் உயிரிழப்பு

தெரு விளக்கு மின்கம்பத்தில் மின்சாரம் பாய்ந்து மாணவன் உயிரிழப்பு
X

மின்சாரம் தாக்கி உயிரிழந்த ரூபேஷ்.

மீஞ்சூர் அருகே தெரு விளக்கு மின்கம்பத்தில் மின்சாரம் பாய்ந்து பத்தாம் வகுப்பு மாணவன் பரிதாபமாக உயிரிழந்தான்.

மீஞ்சூரில் விளையாடிக் கொண்டிருந்த 10ஆம் வகுப்பு மாணவன் தெரு விளக்கு மின்கம்பத்தில் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தான். முறையான பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளாத பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து உறவினர்கள் சாலை மறியல் செய்தனர்.

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் பேரூராட்சிக்குட்பட்ட புதுப்பேடு பகுதியை சேர்ந்தவன் ரூபேஷ் (14) . சிறுவன் ரூபேஷ் அங்குள்ள அரசு பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வந்தான். நேற்று மாலை சிறுவன் விளையாடி கொண்டிருந்த போது அங்கிருந்த உயர்மின் விளக்கு கம்பத்தில் இருந்து மின்சாரம் பாய்ந்து சிறுவன் சுருண்டு விழுந்துள்ளான்.

இதனையடுத்து உறவினர்கள் உடனடியாக சிறுவனை மீட்டு அம்புலன்ஸ் உதவியுடன் பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவனை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுவன் வரும் வழியிலேயே உயிரிழந்ததாக தெரிவித்தனர். இதனையடுத்து பிரேத பரிசோதனைக்காக சிறுவனின் சடலம் பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைக்கப்பட்டது.

இதனிடையே மின் கம்பத்தில் மின்சாரம் கசியும் வகையில் அஜாக்கிரதையாக பராமரித்து வந்த மீஞ்சூர் பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பேரூராட்சி நிர்வாகத்தின் அஜாக்கிரதையால் சிறுவன் உயிரிழந்ததாக புகார் தெரிவித்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை தொடர்ந்து சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. சாலை மறியல் போராட்டம் காரணமாக பொன்னேரி - திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags

Next Story
ai healthcare products