ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய போராட்டம்

ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய போராட்டம்
X

போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள்.

பொன்னேரி அருகே அத்திப்பட்டியில் உள்ள அனல் மின் நிலையத்தில் ஒப்பந்த தொழிலாளர்களாக பணியாற்றி வரும் தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி போராட்டம் நடத்தினர்.

திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டு புதுநகரில் தேசிய அனல் மின் கழகமும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகமும் இணைந்து வல்லூர் அனல் மின் நிலையம் நிறுவப்பட்டு 3அலகுகளில் தலா 500மெகாவாட் என 1500 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

நிலக்கரி கையாளுதல், கொதிகலன் கையாளுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை 1000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர். 10ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றும் ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களை தொழிலாளர்கள் அவ்வப்போது மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் இன்று தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கி கேட் அமர்வு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நிலக்கரி மற்றும் சாம்பல் துகள்களிலும், ஒப்பந்த தொழிலாளர்கள் சிரமத்துடன் பணியாற்றி வருவதாகவும், விபத்துக்களில் தொழிலாளர்கள் பாதிப்படைவதாகவும் உரிமம் இல்லாமல் ஆபத்தான முறையில் வேலை வாங்கும் அனல் மின் நிலைய அதிகாரிகள் மீது தமிழ்நாடு அரசு குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைக்கின்றனர்.

தொழிலாளர்கள் தொடர்பாக எந்த பதிவுகளும் இல்லாத நிலையில் முறையாக பதிவு செய்து அனைவரையும் நிரந்தர தொழிலாளர்களாக அறிவிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கின்றனர்.

Tags

Next Story
ai solutions for small business