நிலக்கரி முனையத்தில் பணியாற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டம்

நிலக்கரி முனையத்தில் பணியாற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டம்
X

பொன்னேரி அருகே நிலக்கரி முனையத்தில் பணியாற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டம் நடத்தினர். 

பொன்னேரி அருகே நிலக்கரி முனையத்தில் பணியாற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டம் நடத்தினர்.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த புழுதிவாக்கத்தில் தனியார் கட்டுப்பாட்டில் எண்ணூர் நிலக்கரி முனையம் இயங்கி வருகிறது. வெளிநாடுகளிலிருந்து கப்பல் மூலம் எண்ணூர் துறைமுகத்திற்கு வரும் நிலக்கரியை கன்வேயர் பெல்ட் மூலம் கொண்டு வந்து இங்கு சேமித்து வைக்கப்படுகிறது.

பின்னர் தனியார் அனல் மின் நிலையங்கள், செங்கல் தொழிற்சாலைகள், இரும்பு உருக்காலைகள் என பல்வேறு நிறுவனங்களுக்கு இங்கிருந்து நிலக்கரி கொண்டு செல்லப்படுகிறது. வெளி மாவட்டங்கள் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும் இங்கிருந்து நிலக்கரி கொண்டு செல்லப்படுகிறது. இங்கு 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர்.

இன்று காலை முதல் நிர்ணயிக்கப்பட்ட ஊதியம் வழங்கிட வேண்டும், அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஒப்பந்த தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்தாண்டு குறைந்தபட்ட ஊதியம் வழங்கிட வேண்டும் என ஊதிய ஒப்பந்தம் போடப்பட்ட நிலையில் அதனை முறையாக அமல்படுத்திட வேண்டும் என வலியுறுத்தி தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தொழிலாளர்களின் வேலை நிறுத்த போராட்டம் காரணமாக தொழிற்சாலைகளுக்கு நிலக்கரி ஏற்றி செல்லும் பணிகள் பாதிக்கப்பட்டு லாரிகள் அணிவகுத்து நிற்கின்றன. தொடர்ந்து காவல்துறையினர், அதிகாரிகள் தொழிற்சங்க நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags

Next Story
ஈரோடு: வயதான தம்பதி மீது மோட்டார் சைக்கிளில் மோதிய கூலி தொழிலாளி பலி