மாநில அளவிலான கராத்தே, சிலம்பம் போட்டி

மாநில அளவிலான கராத்தே, சிலம்பம் போட்டி
X

அலமாதி வாணியம்சத்திரம் பகுதியில் மாநில அளவிலான கராத்தே, சிலம்பம் போட்டி வெற்றி பெற்றவர்களுக்கு திரைப்பட நடிகர் சுமன் பரிசுகளை வழங்கி பாராட்டி பேசினார்.

மாநில அளவிலான கராத்தே, சிலம்பம் போட்டியில் நடிகர் சுமன் பரிசுகை வழங்கினார்.

திருவள்ளூர் மாவட்டம், செங்குன்றம் அடுத்த அலமாதி வாணியம்சத்திரம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் சேப்பா அகாடமி மற்றும் சேப்பா அறக்கட்டளை சார்பில் மாநில அளவிலான கராத்தே மற்றும் சிலம்பம் போட்டி கராத்தே மாஸ்டர்கள் ராஜா, சங்கீதா ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

இப்போட்டியில் பல்வேறு மாவட்டத்திலிருந்து சுமார் 500-க்கும் மேற்பட்ட கராத்தே மற்றும் சிலம்பம் வீரர்கள் கலந்துகொண்டனர். பின்னர் கராத்தே போட்டியில் கட்டா மற்றும் குமித்தே பிரிவுகள் அதேபோல் சிலம்பம் தனித்திறன் பிரிவுகளில் கராத்தே, சிலம்பம் வீரர்கள் போட்டியில் கலந்துகொண்டு வெற்றி பெற்றனர்.

இதணைத்தொடர்ந்து நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளர்களாக திரைப்பட நடிகர் சுமன், திரைப்பட இசையமைப்பாளர் தினா, முன்னாள் அதிமுக அமைச்சர் அப்துல்ரஹீம் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் கலந்துகொண்டு போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு கோப்பை மற்றும் சான்றிதழ் வழங்கினர்.

திரைப்பட நடிகர் சுமன் பத்திரிகையாளர்களுக்கு அளித்தபேட்டியில், சிலம்பம் போன்ற தமிழ் கலாச்சார விளையாட்டுகளை பள்ளி பாடப்பிரிவில் சேர்க்க வேண்டும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு கோரிக்கை வைத்தார். மேலும் இளைஞர்கள் மாணவர்கள் போதைப் பொருட்களுக்கு அடிமையாகாமல் விளையாட்டில் கவனம் செலுத்த வேண்டும் எனவும், சிலம்பம் கராத்தே யோகா போன்ற விளையாட்டுக்கள் பெண்களை பாலியல் குற்றங்களிலிருந்து தப்பிக்க உதவுவதாகவும் அவர் தெரிவித்தார்.

இதில் பெற்றோர்கள், மாஸ்டர்கள் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!