மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டி

பொன்னேரியில் மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டி நடைபெற்று வருகிறது.
State Boxing Competition
பொன்னேரியில் முதன்முறையாக மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 5 பிரிவுகளில் 250க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் பங்கேற்றனர்..
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முதல் போட்டியை திரைப்பட நடிகர் அமரகவி துவக்கி வைத்தார். சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, சேலம் என தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்து 250க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் இதில் பங்கேற்றுள்ளனர். சப் ஜூனியர், ஜூனியர், சீனியர், சூப்பர் சீனியர், எலைட் என 5 பிரிவுகளாக போட்டியாளர்கள் வகைப்படுத்தப்பட்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது. நாக்-அவுட், காலிறுதி, அரையிறுதி, இறுதி போட்டிகள் என போட்டிகள் நடைபெற்று வருகிறது. 2 நாட்கள் நடைபெறும் இந்த போட்டியில் குத்துச்சண்டை போட்டியில் போட்டியாளர்கள் ஆர்வமுடன் பங்கேற்று மோதி வருகின்றனர். எதிராளியைத் திணறடிக்கும் வகையில் சரமாரியாக முகத்திலும், மார்பிலும் குத்து விட்டும், எதிராளியின் தாக்குதலை முழங்கையால் தடுத்து பதில் தாக்குதல் நடத்தியும் போட்டியாளர்கள் உற்சாகமாக விளையாடி வருகின்றனர். நாளை இறுதி போட்டியில் வெற்றி பெறும் போட்டியாளர்களுக்கு முதல் பரிசாக ரூ.20000, இரண்டாம் பரிசாக ரூ.10000, மூன்றாம் பரிசாக ரூ. 5000 வழங்கப்பட உள்ளது. மேலும் சிறந்த போட்டியாளர் விருதும் வழங்கப்பட உள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu