ஆந்திராவிற்கு கடத்த முயன்ற 5டன் ரேஷன் அரிசி பறிமுதல் ,ரேஷன் கடை ஊழியர்கள் கைது

ஆந்திராவிற்கு கடத்த முயன்ற 5டன் ரேஷன் அரிசி பறிமுதல் ,ரேஷன் கடை ஊழியர்கள் கைது
X

ரேஷன் கடை பைல் படம்

பொன்னேரியில் இருந்து ஆந்திராவிற்கு கடத்த முயன்ற 5டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டு, ரேஷன் கடை ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே ஆந்திராவிற்கு கடத்த முயன்ற 5 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. ஆலாடு கிராமத்தில் உள்ள நியாய விலைக் கடையின் அருகே மினி லாரியில் மூட்டை மூட்டையாக ரேஷன் அரிசி ஏற்றப்படுவதாக பொன்னேரி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு போலீசார் சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் ஆந்திராவிற்கு கடத்துவதற்காக ரேஷன் அரிசி மூட்டைகளை லாரியில் ஏற்றியது தெரியவந்தது.

இதனையடுத்து லாரியுடன் 5 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த போலீசார் அதனை கடத்த முயன்ற ரேஷன் கடை ஊழியர்கள் தாமோதரன், செல்வராஜ் ஆகிய இருவரை கைது செய்து உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசில் ஒப்படைத்தனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!