முதலமைச்சர் பிறந்த நாளை முன்னிட்டு வள்ளலார் கோவிலில் சிறப்பு வழிபாடு

முதலமைச்சர் பிறந்த நாளை முன்னிட்டு வள்ளலார் கோவிலில் சிறப்பு வழிபாடு
X

பொன்னேரி வள்ளலார் கோவிலில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு அன்னதானம் நடைபெற்றது.

பொன்னேரியில் முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு வள்ளலார் கோவிலில் திமுகவினர் சிறப்பு வழிபாடு அன்னதானம்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த சின்னக்காவனத்தில் உள்ள வள்ளலார் தாயார் சின்னம்மையார் இல்லத்தில் பொன்னேரி நகர திமுக சார்பில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 71 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு வழிபாடு மற்றும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நகர செயலாளர் வழக்கறிஞர் ஜி.ரவிக்குமார் ஏற்பாடு செய்த நிகழ்வில் அருட்பிரகாச வள்ளலாருக்கு சிறப்பு பிரார்த்தனை நடத்தப்பட்டது. இதனை தொடர்ந்து 500க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு அறுசுவையுடன் கூடிய அன்னதானம் வழங்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து பொன்னேரியில் உள்ள பல்வேறு இடங்களில் கட்சி கொடிகளை ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்பு மற்றும் நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டது.இதில் நகர்மன்ற தலைவர் டாக்டர் பரிமளம் மற்றும் நகர நிர்வாகிகள் வாசுதேவன், ராமலிங்கம், பரிதா ஜெகன், முருகானந்தம், மா.தீபன், கவுன்சிலர்கள், தொண்டர்கள் திரளாக கலந்துகொண்டனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!