ஆடி கிருத்திகையை முன்னிட்டு சிறுவாபுரி முருகன் கோவிலில் சிறப்பு வழிபாடு

சிறுவாபுரி முருகன் கோவிலுக்கு பால்குடம் சுமந்து வந்த பக்தர்கள்.
ஆடி கிருத்திகையை முன்னிட்டு சிறுவாபுரி முருகன் திருக்கோவிலில் காவடி ஏந்தியும், பால்குடம் எடுத்து வந்தும் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர் .
திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம் சின்னம்பேடு சிறுவாபுரி கிராமத்தில் பிரசித்தி பெற்ற அருள்மிகு பாலசுப்ரமணியர் சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. வியாபார வளர்ச்சி, அரசியல் பதவி, ரியல் எஸ்டேட், திருமண தடை, குழந்தை பேறு போன்ற பல்வேறு வேண்டுதல் நிறைவேற இந்த சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் 6.வாரம் தொடர்சியாக வந்து இங்கு விளக்கேற்றி வழிபாடு நடத்தினால் வேண்டுதல் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது.
ஆடி கிருத்திகையை முன்னிட்டு இன்று சென்னை,திருவள்ளூர், காஞ்சிபுரம், மட்டுமல்லாது ஆந்திரா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்தும் இன்று சிறுவாபுரி முருகன் கோவிலுக்கு வந்து சுவாமி தரிசனம் செய்து சென்றனர். விழாவை முன்னிட்டு அதிகாலை மூலவருக்கு பால், தயிறு, சந்தனம், தேன், ஜவ்வாது, பன்னீர், திருநீர் உள்ளிட்ட வாசனை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகமும் செய்யப்பட்டு பட்டு உடைகளாலும், திரு ஆவணங்களாலும், வண்ண மலர்களால் அலங்காரம் செய்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இன்றும் மூலவர் பக்தர்களுக்கு கலங்கி கோலத்தில் பக்தர்களுக்கு அருள் பாவித்தார். இதன் பின்னர் திரளான பக்தர்கள் பிரசித்தி பெற்ற சிறுவாபுரி முருகன் கோவிலில் 400.க்கும் மேற்பட்ட பக்தர்கள் பால் காவடி, புஷ்ப காவடி, பன்னீர் காவடி ஏந்தியும், பால்குடம் எடுத்து வந்து கிராமத்தை வலம் வந்தனர்.
அரோகரா முழக்கத்துடனும், காவடியாட்டத்துடன், தலையில் பால் குடங்களை சுமந்தபடி கிராமத்தை வலம் வந்த பக்தர்கள் கோவிலில் வீற்றிருக்கும் உற்சவருக்கு பாலாபிஷேகம் செய்து வழிபாடு செய்தனர். மேலும் ஆலயத்திற்கு வந்திருந்த ஏராளமான பக்தர்களுக்கு அடிப்படை வசதிகளை ஆலயத்தின் சார்பில் மிகச் சிறப்பாக செய்திருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu