தடப்பெரும்பாக்கம் ஊராட்சியில் சிறப்பு கால்நடை முகாம்
தடப்பெரும்பாக்கம் ஊராட்சியில் நடந்த கால்நடை மருத்துவ முகாமில், கால்நடைகளை சிறப்பாக பராமரித்து பயனாளிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தாலுகா, மீஞ்சூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது தடப்பெரும்பாக்கம் ஊராட்சி. இங்கு, தமிழக அரசின் கால்நடைத்தறை மூலம், சிறப்பு கால்நடை சிகிச்சை முகாம் நடைபெற்றது. ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே நடைபெற்ற முகாமினை, தடப்பெரும்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் பாபு தலைமை தாங்கி துவக்கி வைத்தார். துணைத் தலைவர் சபிதா பாபு முன்னிலை வகித்தார். ஊராட்சி செயலர் ஆறுமுகம் வரவேற்றார்.
இதில் பொன்னேரி கோட்ட கால்நடைத்துறை உதவி இயக்குனர் கோபி கிருஷ்ணா தலைமையில், கல்நடை மருத்துவர் ஆரத்தி முன்னிலையில் ஆய்வாளர் பிரபாவதி பராமரிப்பு உதவியாளர் செல்வகுமாரி ஆகியோர், கலந்து கொண்டு கால்நடைகளுக்கு சிறப்பு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது.
அதன்படி மருத்துவ சிகிச்சை, அறுவை சிகிச்சை, செயற்கை முறை கருவூட்டல், மலட்டுத்தன்மை நீக்க சிகிச்சை, குடற்குழு நீக்கம், ஆண்மை நீக்கம், தடுப்பூசி போடுதல், கோழிகளுக்கு தடுப்பூசி,உள்ளிட்ட நோய் தீர்க்கும் பல்வேறு நடவடிக்கைகள் ஆகிய பணிகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டது. மேலும் கால்நடைகளை கொண்டு வந்து மருத்துவ சிகிச்சை பெறுபவர்களுக்கு ஆலோசனைகளும் வழங்கப்பட்டது.
முகாமில், கிடாரி கன்று பேரணி நடத்தி, சிறந்த மூன்று கன்றுகளின் உரிமையாளர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. சிறந்த கால்நடை வளர்ப்பு முறைகளைப் பின்பற்றும் சிறந்த மூன்று விவசாயிகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. அதன்படி சிறந்த பராமரிப்பாளர் களான செஞ்சுராமன், கோகுல், பாலாஜி,ஆகியோருக்கும் சிறந்த கால்நடை வளர்ப்பு விவசாயி சதீஷ், நாகராஜ், தீனதயாளன் ஆகியோருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில், ஒன்றிய கவுன்சிலர் பரிமளம் ஜெயா, ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பாலாஜி, ஸ்ரீதர் பாபு, மலர்விழி, தியாகராஜன், மல்லிகா, பிரதாப்சந்திரன், லட்சுமி, நரேஷ் குமார், உஷா, பரிமளா, ராஜேஸ்வரி உள்ளிட்டபலர் கலந்து கொண்டனர். முகாமில் 500க்கும் மேற்பட்ட கால் நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu